பாஜகவில் ஏற்பட்ட பாலியல் சர்ச்சை! நடந்தது என்ன தெரியுமா?

0
107

தமிழக பாஜக வின் பொதுச் செயலாளராக இருந்த கே டி ராகவன் மீது அந்த கட்சியை சார்ந்தவர்கள் பாலியல் புகாரை சுமத்தினார்கள். அதனை ஏற்க மறுத்த கே.டி ராகவன் இது எனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட ஒரு ஆதாரம் என்று தெரிவித்திருக்கிறார்.அதாவது நேற்று முன்தினம் பாஜகவை சேர்ந்த பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் தன்னுடைய யூடியூப் சேனல் ஒன்றில் கே டி ராகவன் பாஜக பெண் நிர்வாகி ஒருவரிடம் சட்டை அணியாமல் ஆபாசமாக உரையாடும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதோடு இது தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலுடன் தான் வெளியிடப்படுகிறது என்று அந்த வீடியோவில் மதன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் , கே.டி ராகவன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் என்னையும், என் கட்சியையும், களங்கப்படுத்தும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது என்று மரியாதைக்குரிய மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறேன் சட்டப்படி சந்திப்பேன் தர்மம் வெல்லும் என்று பதிவிட்டு இருந்தார்.இந்த நிலையில், மதன் வெளியிட்ட அந்த வீடியோவில் நான் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் உடைய வீடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மதன் ரவிச்சந்திரன் என்னை சந்தித்தது உண்மைதான். அவர் பாஜகவில் பொறுப்பிலிருக்கும் ஒரு சிலரின் வீடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இருந்தாலும் நான் ஒரு காணொளியை வைத்து நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள இயலாது. நீங்கள் சம்பந்தப்பட்ட காணொளியை என்னிடம் சமர்ப்பியுங்கள் அதனை ஆய்வு செய்த பின்னர் தவறு இருக்கிறது என்றால் நான் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தேன் என கூறியிருக்கிறார் அண்ணாமலை.

ஆனாலும் மதன் ரவிச்சந்திரன் அந்த வீடியோ ஆதாரத்தை அண்ணாமலை இடம் சமர்ப்பிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் மீண்டும் தொலைபேசியில் குறுஞ்செய்தியில் ஒரு விஷயத்தை தெரிவித்திருக்கிறார். மதன் ரவிச்சந்திரன் அதாவது அண்ணாமலை தொலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியில் கட்சியில் கே டி ராகவன் மற்றும் இன்னும் பலருடைய வீடியோக்கள் என்னிடம் இருக்கிறது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கு நியாயம் கிடைக்குமா என்பது போன்ற கேள்விகள் மதன் ரவிச்சந்திரன் இருந்து எழுப்பப்பட்டிருக்கிறது. இதனை கவனித்த மாநில தலைவர் அண்ணாமலை ஒரே வார்த்தையில் சுருக்கமாக முடித்துவிட்டார் அதாவது நீங்கள் தாராளமாக செய்துகொள்ளுங்கள் என்று அறிவித்துவிட்டார் என சொல்லப்படுகின்றது.

இந்தநிலையில், பாஜகவின் தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியதை உணர்ந்து கொண்ட பின்னர் அந்த கட்சியில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை ஏற்படுத்தி இந்த புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்யுங்கள் என்று உத்தரவிட்டு இருக்கிறார். அந்த விசாரணைக் குழுவிற்கு மலர்கொடி தலைமை ஏற்றிருக்கிறார் இதுதொடர்பான விவரம் என்ன என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்.