இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..?

0
70
#image_title

இன்னும் மிக்ஜாம் புயல் தாக்கமே முடியல.. அதற்குள் அடுத்த புயலா..? பெயர் என்னவென்று தெரியுமா..?

வட தமிழக கடலோர மாவட்டங்களை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயலால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையை ஒரு ஆட்டம் காண வைத்து விட்டு நேற்று ஆந்திரா அருகே கரையை கடந்தது.

ஆண்டில் நவம்பர், டிசம்பர் மாதம் எப்படியும் ஒரு புயலாவது உருவாகி விடுவது தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமாக இருக்கிறது. இப்படி அவ்வப்போது மக்களுக்கு உயிர் பயத்தை காட்டி வரும் புயல்களுக்கு பெயர் சூட்டுவது யார்? அடுத்த புயலின் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வமாக இருக்கும்.

புயல் எப்படி உருவாகிறது..?

1)காற்றழுத்த தாழ்வு பகுதி

2)காற்றழுத்த தாழ்வு மண்டலம்

3)ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

4)புயல்

புயலுக்கு பெயர் வைப்பது யார்?

உலகில் ஏற்படும் புயல்களுக்கு உலக வானிலை ஆய்வு மையம் தான் பெயர் சூட்டுகிறது. இந்த மையத்தில் சுமார் 193 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த 193 நாடுகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த மண்டலங்களுக்கு தான் புயலுக்கு பெயர் வைக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தற்பொழுது உருவான புயலுக்கு மிக்ஜாம் என்று பெயர் வைத்த நாடு?

தற்பொழுது ருத்ர தாண்டவம் ஆடி சென்ற மிக்ஜாம் புயலுக்கு பெயர் வைத்த நாடு மியான்மர் ஆகும். மிக்ஜாம் என்பதற்கு வலிமை, மீளாத் தன்மை என்று பொருள். பெயருக்கு ஏற்றவாறு புயலும் பலமாகத் தான் இருந்தது.

இந்நிலையில் அடுத்து உருவாக இருக்கும் புயலுக்கு “ரெமல்” என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த பெயரை ஓமன் நாடு பரிந்துரை செய்திருக்கிறது. அதேபோல் ரெமல்க்கு அடுத்து உருவாக இருக்கும் புயலுக்கு “அஸ்னா” என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த பெயரை பாகிஸ்தான் பரிந்துரை செய்திருக்கிறது. இவ்வாறு அடுத்து உருகவாக இருக்கும் 150 புயல்களுக்கு முன் கூட்டியே பெயர் சூட்டப்பட்டு அதற்கான பெயர் பட்டியல் தயாராக வைத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.