நேற்று காலை ஒப்பந்தத்தில் உறுதியளித்த ரஷ்யா மாலை உக்ரைன் துறைமுகத்தில் ஏவுகணை தாக்குதல்!! வெளிவந்த பகீர் தகவல்!!

0
102
Missile attack on the port of Ukraine in the evening, Russia promised in the agreement yesterday morning!! Information released!!
Missile attack on the port of Ukraine in the evening, Russia promised in the agreement yesterday morning!! Information released!!

நேற்று காலை ஒப்பந்தத்தில் உறுதியளித்த ரஷ்யா மாலை உக்ரைன் துறைமுகத்தில் ஏவுகணை தாக்குதல்!! வெளிவந்த பகீர் தகவல்!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா  போர் தொடர்ந்து மாத கணக்கில் தொடுத்து  வருகிறது. இதனால் அப்பாவிப்பட்ட ஜனங்கள் உயிரிழக்கிறார்கள். மேலும் உக்ரைன் தானிய ஏற்றுமதி தொடர்பாக வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறிவுள்ளது.மேலும் அந்நாட்டு ஒடெசா  துறைமுகத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ரஷ்யாவின் இரு காலிபர் ரக குரூஸ் ஏவுகணைகள் மூலம்  ஒடெசா துறைமுகத்தின் மீது சனிக்கிழமையான நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.மேலும் துறைமுகத்தை நோக்கி வீசப்பட்ட இரு ஏவுகணைகளை உக்ரைனின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து  அழித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அந்த அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த தாக்குதலை குறித்து உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் ஒலெக் நிக்கோலென்கோ கூறப்பட்டிருப்பதாவது, கோதுமை ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பிறகு அந்த ஒப்பந்தத்தையும் மீறி உக்கிரன் துறைமுகத்தின் மீது ரஷ்யா படையினர் தாக்குதல் நடத்தப்பட்டது.

கையொப்பமிட்டு 24 மணி நேரம் கூட ஆகவில்லை. இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஐ.நா மற்றும் துருக்கி முன்னிலையில் அளித்த வாக்குறுதியை ரஷ்யா மீறிவுள்ளது.இஸ்தான்புல் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பதத்தை நிறைவேற்ற ரஷ்யா தவறினால் அதற்கான பொறுப்பை ரஷ்யாவே ஏற்க வேண்டும்.

மேலும் நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா படையினர் கடந்த மாதம்  படையெடுத்து போரின் ஒரு பகுதியாக கருங்கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்தியது. அந்த கடல் வழியாக உக்கிரன் பொருட்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்வதை ரஷ்யா படையினர் தடை ஏற்படுத்தி வருகின்றது.

இதனால் சர்வதேச அளவில் உணவுப்பொருள் வினியோகம் தடை ஏற்பட்டு உணவு பற்றாக்குறை நெருக்கடி ஏற்படுமென்று  ஐ.நா குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் கப்பலில் ஏற்றப்படுவதை துருக்கி உக்கிரன் ஐ.நா அதிகாரிகள் மேற்பார்வையிடுவதற்கும், கருங்கடலை கடந்து துருக்கியின் பாஸ்பரஸ் நீரினை வழியாக செல்லும் தானிய கப்பல்களை ஐ.நா ரஷ்யா உக்ரைன் துருக்கி அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு கண்காணிப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஒப்பந்தம் காலம் முழுவதும் துறைமுகங்கள் மீதோ,சரக்கு கப்பல்கள் மீதோ மற்றும் தானியங்களின் மீதும் தாக்குதல் நடத்தாமல் இருக்க ரஷ்யாவும் உக்ரைனும் சம்மதித்தன. இது தொடர்பாக ஜூலை 23 தானிய ஏற்றுமதி ஒப்பந்த நிபந்தனைகளை மீறி ஒடிசா துறைமுகத்தில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு அந்தோனியா குட்டேரெஸ் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் அலுவலகம் வெளியிட்டது.

இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனிலிருந்து தானியங்கள் மற்றும் பிற வேளாண் பொருட்களை சர்வதேச சந்தைக்கு பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்வதை உறுதி செய்ய அனைத்து தரப்பினர் முன்னிலையிலும் வெள்ளிக்கிழமை அன்று உறுதி அளித்தனர்.

சர்வதேச உணவுப் பொருள் பற்றாக்குறை தவிப்பதற்காகவும் மற்றும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பட்டினியை போக்குவதற்கு இந்த வேளாண் பொருட்கள் மிகவும் அவசியமானதாகும்.

author avatar
Parthipan K