Mobile phone திருடு போய்விட்டதா?? இந்த மூன்று விஷயத்தை பண்ணுங்க!!

0
34

Mobile phone திருடு போய்விட்டதா?? இந்த மூன்று விஷயத்தை பண்ணுங்க!!

நம்முடைய மொபைல் போன் திருடு போய்விட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

1. உங்களது மொபைல் போன் திருடு போய்விட்டது என்று தெரிந்த ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள் கம்ப்யூட்டரிலோ அல்லது மற்றொரு மொபைல் போனிலோ Find my divice ஐ ஓபன் செய்து அதில் திருடு போன மொபைல் போனில் இருக்கின்ற இமெயில் ஐடியை போட்டு லாகின் செய்து, நம்முடைய மொபைல் போன் எங்கு இருக்கிறது என்பதை டிரேஸ் செய்யலாம்.

ஒருவேளை இதன் மூலமாக நம் மொபைல் போனை கண்டுபிடிக்க முடியாவிட்டாலோ அல்லது மொபைல் போன் திருடு போய்விட்டது என்று பல மணி நேரம் கழித்து நமக்கு தெரிய வந்தாலோ, திருடன் உங்களது மொபைல் போனை hard reset பண்ணி இருப்பதற்கு தான் வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு பண்ணி இருக்கும் சமயத்தில் நமக்கு மொபைல் போனை கண்டுபிடிக்க இருக்கின்ற ஒரே வழி IMEI நம்பர் தான். இந்த நம்பரை வைத்து நம் மொபைல் போனை ட்ரேஸ் செய்ய முடியும் ஆனால் அதை நம்மால் பண்ண முடியாது.

2. இரண்டாவது மொபைல் போன் திருடு போய்விட்டதை அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும். மேலும் FIR பைல் பண்ண வேண்டும். இதற்கு நம்முடைய மொபைல் போன் திருடு போன பகுதி, நம்முடைய சொந்த முகவரிகள் மற்றும் மொபைல் போனின் IMEI நம்பர் முதலியவை தேவைப்படும்.

இதன்பிறகு காவல்துறையினர் நம்முடைய மொபைலை டிரேஸ் செய்வார்கள். ஆனால் மொபைல் போன் எப்பொழுது கிடைக்கும் என்று சரியாக சொல்ல முடியாது. அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. திருடி சென்ற நபர் அந்த மொபைலை வேறு சிம் கார்ட் போட்டு பயன்படுத்துவாரா அல்லது அந்த மொபைல் போனை விற்று விடுவாரா அல்லது அந்த மொபைல் போனை பாகமாகப் பிரித்து விற்று விடுவாரா என்று எதுவுமே நமக்கு தெரியாது.

ஒருவேளை திருடி சென்ற நபர் மொபைல் போனை பாகங்களாக பிரித்து விற்று விட்டால் மொபைல் போனை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். ஒருவேளை மொபைல் போனை திருடி சென்ற நபர் முழுதாக விட்டுவிட்டாலும் அடுத்து அந்த மொபைல் போனில் யார் எப்பொழுது வேறு சிம் கார்டு போடுவார்கள் என்று நமக்கு தெரியாது. இவ்வாறு எதுவும் நடக்காமல் இருப்பதற்காக அரசு ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

3. அதாவது உங்களது மொபைல் போனை வேறு யாரும் சிம் கார்டு போட்டு பயன்படுத்தாமல் இருப்பதற்காக நம்முடைய மொபைல் போனை நாமே பிளாக் செய்யும்படி தமிழக அரசு இந்த புதிய வெப்சைட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. அதுதான் CEIR website.

இதனுள் சென்று block stolen / lost mobile ஐ கிளிக் செய்து, அதில் தொலைந்து போன மொபைலில் IMEI நம்பர் காவல்துறையில் புகார் அளித்த நம்பர் மற்றும் சொந்த முகவரிகள் அனைத்தையும் கொடுத்து உங்கள் மொபைல் போனை வேறு யாரும் பயன்படுத்தாதபடி பிளாக் செய்து கொள்ளலாம். உங்களது மொபைல் போன் கிடைத்த பிறகு இது வெப்சைட் உள்ளே சென்று போனை unblock செய்து கொள்ளலாம்.

ஒருவேளை திருடிச் சென்ற நபர் நம் மொபைல் போனின் IMEI நம்பரை மாற்றி விட்டால் அது service provider க்கு தெரிந்து விடும் அது சட்டப்படி குற்றம் என்பதால் இவர்கள் காவல்துறைக்கு இது குறித்து தகவல் கொடுத்து விடுவார்கள்.

எனவே இது போல் நடப்பதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் குறைவுதான். எனவே மொபைல் போன் திருடு போய்விட்டால் மேலே குறிப்பிட்டுள்ள இந்த வழிமுறைகளை செயல்படுத்தி உடனடியாக திருடு போன மொபைலை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்.

author avatar
CineDesk