இனி Gas சிலிண்டர் வாங்கும்போது யாரும் ஏமாறாதீங்க!! இதை செய்தால் NO டெலிவரி சார்ஜ்!!

0
29

இனி Gas சிலிண்டர் வாங்கும்போது யாரும் ஏமாறாதீங்க!! இதை செய்தால் NO டெலிவரி சார்ஜ்!!

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைவரும் சமையல் எரிவாயு அதாவது கேஸ் சிலிண்டர் இதையே பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டரின் விலை ஒருபுறம் ஏறிக்கொண்டே போக இன்னொரு புறம் அதனை டெலிவரி செய்ய வரும் நபர்கள் நம்மிடம் டெலிவரி சார்ஜ் என்று ஒரு தொகையை கேட்கிறார்கள்.

நம்மில் சிலர் அதைக் கொடுக்கணுமா வேண்டாமா என்று தெரியாமலேயே அதை டெலிவரி செய்யும் வருபவர்கள் கேட்கும் தொகையை கொடுத்து விடுகிறோம்.ஆனால் டெலிவரி சார்ஜ் என்பது நாம் வாங்கும் கேஸ் சிலிண்டர் விலையில் சேர்க்கப்பட்டிருக்கும்.

அதனால் கேஸ் டெலிவரி செய்ய வரும் நபர்களிடம் டெலிவரி சார்ஜ் என்ற தனித்தொகையை தர வேண்டிய அவசியம் இல்லை.

அவ்வாறு நீங்கள் தர வேண்டும் என்று சிலர் உங்களை கட்டாயப்படுத்தினால் அதற்காக நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.இதை எவ்வாறு புகார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

உங்களிடம் கேஸ் டெலிவரி செய்ய வரும் நபர் தரும் பில்லில் உள்ள 18002333555 இந்த எண்ணிற்கு அழைத்து கேஸ் டெலிவரி செய்ய வந்த நபர் மற்றும் எந்த நிறுவனம் என்பதை கூறி என்ன பிரச்சனை என்பதையும் தெளிவாக கூறினால் மட்டும் போதும் அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும்.

இது மட்டுமல்லாமல் ஒரு கேஸ் ஏஜென்சியில் நீங்கள் சமையல் எரிவாயு வாங்குகிறீர்கள் என்றால் அந்த கேஸ் ஏஜென்சி உங்களை ஸ்டவ் லைட்டர் போன்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினாலும் இந்த எண்ணிற்கு அழைத்து புகாரை தெரிவிக்கலாம்.

அப்படி நீங்கள் புகார் செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், pgportal.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று revence என்று ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அதில் large public ravence என்பதை கிளிக் செய்து உங்களது பேரில் ஒரு account கிரியேட் செய்து register செய்ய வேண்டும்.

அதன்பிறகு user I’d , password போன்றவை கொடுத்து security code யை பதிவு செய்ய வேண்டும்.

Login செய்த பிறகு அதன் பக்கத்திற்குள் சென்று petroleum and natural gas என்ற ஆப்ஷனை கிளிக் செய்து category என்பதை செலக்ட் செய்து அதில் LPG and agency related செலக்ட் செய்து அதில் நீங்கள் எந்த ஊர் கேஸ் ஏஜென்சியின் நிறுவனம் அதை டெலிவரி செய்த வந்த நபரின் விவரங்கள் அனைத்தையும் உள்ளிட்டு உங்களது புகாரை தெரிவிக்கலாம்.

அதன் பிறகு இறுதியாக உங்களது security code , registration number முதலியவற்றை பதிவிட்டு submit கொடுத்துவிட்டால் போதும். உங்களது புகார் பதிவாகிவிடும்.

இதன் மூலம் டெலிவரி சார்ஜ் கேட்கும் நபர் மட்டும் அல்லாமல் அந்த நிறுவனத்தின் மீதும் புகாரை தெரிவிக்கலாம்.

author avatar
Parthipan K