எனது ரோல் மாடல் தோனியோ கோலியோ இல்லை!! இந்த கிங் தான் எனக்கு எப்போதும் கொல்கத்தா வீரரின் அதிரடியான பதில்!! 

0
29
My role model is neither Dhoni nor Kohli!! This king is always the sizzling response of a Kolkata player for me!!
My role model is neither Dhoni nor Kohli!! This king is always the sizzling response of a Kolkata player for me!!

எனது ரோல் மாடல் தோனியோ கோலியோ இல்லை!! இந்த கிங் தான் எனக்கு எப்போதும் கொல்கத்தா வீரரின் அதிரடியான பதில்!! 

தனது ரோல் மாடல் டோனியோ அல்லது விராட் கோலியோ  இல்லை. என ஆசிய விளையாட்டுப் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த ரிங்கு சிங் கூறியுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அனைத்து ரசிகர்களையும் தனது அதிரடி சரவெடியான ஆட்டத்தால் தன் பக்கம் ஈர்த்த வீரர் ரிங்கு சிங். கொல்கத்தா அணியில் விளையாடிய இவரின் ஆட்டம் அந்த அணி ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்து இழுத்தது.

அதிலும் குறிப்பாக இவர் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்ஸர் அடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தனது அதிரடி அபார ஆட்டத்தினால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியில் ரிங்கு சிங்  இடம்பெற வேண்டும் என பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் இங்கு ரிங்கு சிங் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

ரிங்கு அந்த தொடரில் இடம்பெறாததால் கட்டாயம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே ரசிகர்களை ஏமாற்றாமல் அவர் அந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் தனது ரோல் மாடல் குறித்து ரிங்கு சிங் ஒரு பேட்டியில் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதில் தன்னுடைய மாநிலத்தில் பிறந்து 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை உட்பட இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய சுரேஷ் ரெய்னா தான் தனது ரோல் மாடல் என தெரிவித்தார்.

எப்போதும் என்னுடைய ரோல் மாடல் சுரேஷ் ரெய்னா. அவருடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். ஐபிஎல் தொடரில் கிங்கான அவர் எனக்கு எப்பொழுதும் நிறைய ஆலோசனைகளை கொடுத்து வருகிறார். அதேபோல பஜ்ஜூ பா(ஹர்பஜன்) என்னுடைய கேரியரில் வளர்வதற்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார்.

அவர்களுடைய ஆதரவுக்கும் உதவிக்கும் எப்பொழுதும் நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். அவர்களைப் போன்ற பெரிய வீரர்கள் உங்களைப் பற்றி பேசும் பொழுது அதுவே உங்களுக்கு பெரிய உத்வேகமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.