பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ!!

0
35

பெண்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ!!

தற்போது ஏராளமான பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை தான் மலட்டுத்தன்மை. அந்த மலட்டுத்தன்மைக்கான அறிகுறிகள் என்னவென்று இங்கு தெரிந்து கொள்வோம். பெண்கள் கருவுறாமல் இருப்பதற்கு பிசிஓடி பிரச்சனை, கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சனை, உணவினால் ஏற்படக்கூடிய பிரச்சனை, மன அழுத்தம், நீர்கட்டிகள், எடை அதிகரிப்பு ஆகியவற்றாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த மலட்டுத்தன்மையை ஏற்படுவதற்கு சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அது என்னவென்று இங்கு பார்ப்போம்.

முதலில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 28 நாளிலிருந்து 30 நாளுக்குள் மாதவிடாய் போக வேண்டும் அப்படி இல்லாமல் இந்த சுழற்சிக்கு முன்போ அல்லது பின்பு மாதவிடாய் போகக்கூடாது. அப்படி நீண்ட நாட்கள் கழித்து போனால் அது மலட்டுத்தன்மையின் ஒரு அறிகுறி ஆகும்.

மாதவிடாய் நீண்ட நாட்களுக்கு தள்ளிப் போய் வராமல் இருப்பது இந்த மலட்டுத்தன்மை பிரச்சனையை இருமடங்காக்கும். அடுத்து நம் கர்ப்பப்பையின் வாய் மிகவும் தடிமனாக இருந்தால் விந்தனுக்கள் உள்ளே போவதை தாமதமாக்கும் மற்றும் விந்தணுக்கள் கர்ப்பப்பையில் உள்ளே சென்றவுடன் இறந்துவிடும். இதுவும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படக்கூடிய ஒரு அறிகுறி ஆகும்.

கருப்பை ரத்தப் போக்கிற்கும் மாதவிடாய்க்கும் சம்பந்தம் கிடையாது. கருப்பை கட்டியானது கருப்பையில் இருக்கக்கூடிய தசை திசு அதிகரிக்கும் போது உருவாகும். எனவே கருவுற்று இருந்தால் கூட இந்த கட்டியின் காரணமாக கருச்சிதைவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

உடலுறவின்போது பொதுவாக வலி இருக்காது. அப்படி வலி ஏற்பட்டால் அது கருப்பையில் இருக்கக்கூடிய பிரச்சனையாக கூட இருக்கலாம். இந்த நிலையானது கருவுறாமைக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

மேலும் மாதவிடாயின் போது அதிக அடி வயிற்று வலி இடுப்பு வலி போன்றவற்றை அனுபவித்து வந்தால் கண்டிப்பாக ஒரு மருத்துவரை நாடி கர்ப்பப்பையில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

எனவே பெண்களுக்கு இந்த மாதவிடாய் பிரச்சனை கர்ப்பப்பையில் பிரச்சனை தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருந்தால் அது மலட்டு தன்மையின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

author avatar
CineDesk