மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று! மருத்துவ கவுன்சில் பகீர்!

0
250
#image_title

இன்றைய நிலையில் இந்தியாவில் மீண்டும் 335 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 1701 பேராக உயர்ந்துள்ளது என மத்திய பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கோவிட்-19 பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.50 கோடி (4,50,04,816) மற்றும் இறப்பு எண்ணிக்கை 5,33,316 ஆக உள்ளது, காலை 8 மணிக்கு புதிய தகவல் வந்தது.

 

நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,69,799 ஆக அதிகரித்துள்ளது. தேசிய மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வழக்கு இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

 

அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாட்டில் இதுவரை 220.67 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

என்னதான் புதிய கேசுகள் உருவாகிக்கொண்டே இருந்தாலும் இறப்பு விகிதமும் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றது. கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவி உள்ளதால் பயத்தை அளிக்கிறது. மீண்டும் இது சபரிமலை சீசன் என்பதால் மக்கள் கூடும் இடத்தில் நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது இதனால் அரசு முன் எச்சரிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.

 

மேலும் இது பொங்கல் மற்றும் நியூ இயர் தொடர்ந்த வருவதால் மக்கள் தங்களது இருப்பிடத்திற்குச் சென்று வருவார்கள் அப்பொழுது மேலும் தோற்றுப் பரவும் அபாயம் ஏற்படும் அதனால் முன்னரே அரசு செயல்பட வேண்டும் என்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

author avatar
Kowsalya