இனி இந்த எண் இல்லாமல்  கைப்பேசி கிடையாது! மத்திய அரசு தகவல்!

0
79
No more mobile phone without this number! Central government information!
No more mobile phone without this number! Central government information!

இனி இந்த எண் இல்லாமல்  கைப்பேசி கிடையாது! மத்திய அரசு தகவல்!

மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கைப்பேசி மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கைப்பேசி என அனைத்தும் சர்வதேச கைப்பேசி சாதன அடையாள எண்னை அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் https://icdr.ceir.gov.in  என்ற வலைதளத்தில் கைப்பேசி தயாரிப்பாளர்கள் கட்டாயமாக பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் இயக்கப்பட்டுள்ளது.போலி கைப்பேசி சாதனங்கள் தொலைத்தொடர்பு கட்டமைப்பில் ஒரே ஐஎம்இஐ எண்ணைக் கொண்டவைகளாக உள்ளது.மேலும் தொலைபேசி தொலைந்து போகும் கைப்பேசிகளைக் கண்டுபிடிப்பதில்  சிக்கல்கள் உள்ளது எனவும் கூறப்படுகின்றது.

ஆகையால் கைபேசிகளை முதல் முறையாக விற்பனை செய்யும் முன் அதன் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஓவ்வொரு கைபேசிக்கும் 15 இலக்கங்கள் கொண்ட ஐஎம்இஐ  எண் தனித்துவமாக உள்ளது எனவும் அதுவே அடையாள எண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K