பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடாது கருப்பு போல பெய்யும்அடைமழை!! மீண்டும் 5 நாட்களுக்கு கனமழை உள்ளதாம்!!

0
32
No warning to the public, torrential rain falling like black!! Heavy rain for 5 days again!!
No warning to the public, torrential rain falling like black!! Heavy rain for 5 days again!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடாது கருப்பு போல பெய்யும்அடைமழை!! மீண்டும் 5 நாட்களுக்கு கனமழை உள்ளதாம்!!

தமிழ்நாட்டில் மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது.

தற்போது தமிழக முழுவதுமே மழை பரவலாக விட்டுவிட்டு பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது பற்றி வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இன்று (07.09.2023) மற்றும் 08.09.2023 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதுபோல கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

09.09.2023- அன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

10.09.2023 – 11.09.2023 தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால், பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகள், மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளன.

12.09.2023 – 13.09.2023 தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இடி,மின்னலுடன் பெய்யக்கூடும்.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது.

அப்போது அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும்.

இவ்வாறு சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.