திருடனைப் பிடித்து வெளுத்து வாங்கிய விஜயகாந்த் – நினைவை பகிர்ந்த பிரபல நடிகர்!

0
80
#image_title

திருடனைப் பிடித்து வெளுத்து வாங்கிய விஜயகாந்த் – நினைவை பகிர்ந்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் ஒரு பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் தியாகு. இவர் மை டியர் மார்த்தாண்டன், கிழக்கு வாசல், இராசையா, வனஜா கிரிஜா, தினமும் என்னை கவனி, இரட்டை ரோஜா மற்றும் கும்பகோணம் கோபாலு போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். இதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசை வயலின் கலைஞர் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் பேரனாவார். இவர் தன் நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார். குறிப்பாக, ஆகாய கங்கை, ஊமை விழிகள் ஆகிய படங்கள் அடங்கும்.நடிப்பு மட்டுமல்லாமல் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ‘பிரேமலோகா’ என்ற கன்னட படத்தை தியாகு இயக்கியுள்ளார்.

நடிகர் தியாகு ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் நடிகர் விஜயகாந்த் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

விஜயகாந்திற்கு உதவி செய்யும் எண்ணம் அதிகமாக இருக்கிறது. அவரிடம் பேச சில பேர் பயப்படுவாங்க. நான் தான் அவரிடம் நெருக்கமாக பழகினேன். நான், எஸ்.ஏ.சந்திரசேகர், ராதாரவி எல்லாரும் அவருடன் தான் இருப்போம். அவரிடம் என் நட்பு எப்போது ஆரம்பித்தது என்றால், ஒருமுறை இலங்கைத் தமிழர்களுக்காக நான் விஜயகாந்த் கூட பேச ஆரம்பித்தபோது, அது குறித்து நாங்கள் இருவரும் நிறைய பேசினோம். அதுப்பற்றி போனில் தினமும் பேசிக்கொண்டோம். அதிலிருந்துதான் எனக்கும், அவருக்கு நட்பு ரீதியான பழக்கம் அதிகமானது. அவருக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ரொம்ப ஜாலியான மனிதராக இருந்தார்.

ஒரு தடவை நானும், விஜயகாந்த்தும் மனோரம்மா வீட்டு விசேஷத்திற்கு சென்று காரில் வந்துக் கொண்டிருந்தோம். அப்போது வரும் வழியில் ஒரு பெண் கழுத்திலிருந்த செயினை ஒருவன் பறித்துக் கொண்டு ஓடினான். உடனே, நானும், விஜயகாந்த்தும் காரில் இறங்கி ஓடிச் சென்று அந்த திருடனை பிடித்து வெளுத்து வாங்கினோம். பின்னர், அந்த செயினை அந்த திருடனிடமிருந்து வாங்கி அப்பெண்மணியிடம் விஜயகாந்த் ஒப்படைத்தார் என்று அந்த பேட்டியில் நடிகர் தியாகு மனம் திறந்து பேசினார்.

author avatar
Gayathri