காய்கறி செடிகளில் உள்ள பூச்சிகளை அழிக்க இயற்கை பூச்சி விரட்டி இனி நாமே தயார் செய்யலாம்!!

0
121
#image_title

காய்கறி செடிகளில் உள்ள பூச்சிகளை அழிக்க இயற்கை பூச்சி விரட்டி இனி நாமே தயார் செய்யலாம்!!

உங்கள் வீட்டு தோட்டத்தில் இலை,காய்களை சாப்பிடும் புழு பூச்சிகள் அதிகளவில் இருந்தால் அதை அழிக்க இரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை பூச்சி விரட்டி தயாரித்து செடிகளுக்கு தெளியுங்கள்.இதனால் செடிகள் ஆரோக்கியமாக இருக்கும்.அதுமட்டும் இன்றி இந்த செடிகளில் விளையாக் கூடிய காய்கறிகள் உடலுக்கு எந்த’ஒரு தீங்கையும் ஏற்படுத்தாது.

தேவையான பொருட்கள்:-

1)நாட்டு மாட்டு கோமியம்
2)பப்பாளி இலை
3)அத்தி இலை
4)ஆவாரை
5)வரிக்குமட்டி

செய்முறை:-

பப்பாளி இலை,அத்தி இலை,ஆவாரை மற்றும் வரிக்குமட்டி ஆகிய நான்கு இலைகளை தலா ஒரு 1/2 கிலோ அளவு எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு உரலில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு பிளாஸ்டிக் ட்ரம் எடுத்து அதில் 5 லிட்டர் நாட்டு மாட்டு கோமியம் சேர்க்கவும்.

பிறகு அரைத்த விழுதை சேர்த்து ஒரு கம்பு கொண்டு கலக்கவும்.இந்த ட்ரம்மை ஒரு காட்டன் துணியால் மூடி நிழலில் வைத்து விடவும்.

ஒரு வாரம் கழித்து பார்த்தால் இயற்கை பூச்சி விரட்டி தயாராகி விடும்.இதை 10 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி அளவு சேர்த்து செடி,கொடிகளுக்கு தெளித்தால் அதில் உள்ள பூச்சி,புழுக்கள் அழிக்கப்பட்டு செடி ஆரோக்கியமாக வளரத் தொடங்கும்.