கொரோனா தடுப்பு ஊசி தயாரானவுடன் இந்தியாவில் யாருக்கெல்லாம் முதலில் போட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது!

0
56
Vaccination
Vaccination

கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக கடந்துள்ளது ௭ன்பது அனைவரும் அறிந்ததே.

இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இந்த இறுதிக்கட்ட பரிசோதனையையும் வெற்றிகரமாக கடக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மற்றும் அமைச்சர்கள் கொண்ட குழு இந்தியாவில் யார்யார்க்கெல்லாம் முதலில் இந்த தடுப்பூசியை போடலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனாவுக்கு எதிரான தாக்குதலின்போது முன்கள பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் போன்ற மக்களுக்கு முதலில் தடுப்பூசியை போடலாம் என்று பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தடுப்பூசியை முன்னுரிமை அடிப்படையில் யாருக்கு போடுவது என்பதை அறிவியல் பூர்வமான ஒரு அணுகுமுறையை பின்பற்றி எடுக்க வேண்டும் என்றும் பேசப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் பட்டியலை இந்த  மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிட உள்ளதால் அவற்றை தயார்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K