பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் கைது! காரணம் என்ன? 

0
128
#image_title

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ பயிற்சி முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ராணுவ வீரர் கைது! காரணம் என்ன? 

பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பதிண்டா ராணுவ முகாமுக்குள் சில நாட்களுக்கு முன்பு அதிகாலை தூப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதனால் அலர்ட் ஆன ராணுவ வீரர்கள் ஆயுதங்களோடு துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு சென்றனர். தீவிரவாதிகள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

உடனடியாக துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்று பார்த்த போது குண்டு பாய்ந்த நிலையில், 4 ராணுவ வீரர்கள் இறந்து கிடந்தனர்.

அவர்கள் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பெயர்கள் சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரிய வந்தது.

இதில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களை சுட்ட  நபர்கள் யார் என்று ராணுவமும் நம் மாநில போலீசரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்.

பத்திண்டா ராணுவ முகாமில் உடன் பணிபுரிந்த பீரங்கி படைப்பிரிவை
ராணுவ வீரர் தேசாய் மோகன் என்பவர் ஆயுதக் கிடங்கில் இருந்து INSASதுப்பாக்கிகளை திருடி அதன் மூலம் நான்கு ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றதை விரிவான விசாரணையில் ஒத்துக் கொண்டுள்ளார்.

மேலும் அந்த நபர் போலீசார் காவலில் வைக்கப்பட்டு தனிப்பட்ட காரணங்களால் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்
இது தீவிரவாத தாக்குதல் இல்லை என்று ஏற்கனவே சொன்னது போல் மீண்டும் இதே ராணுவத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.

author avatar
Savitha