கொய்யாக்கனி தருகிறேன் வா என கூறி அழைத்து சென்று கொலை!

0
73
koyakkani-will-come-and-take-you-away-and-kill-you
koyakkani-will-come-and-take-you-away-and-kill-you

நத்தம் அருகே சின்னையன்பட்டியில் 6 வயது சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவரை கைது செய்த காவல் அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகீழ் இருக்கும் கோட்டையூர்-சின்னையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேசியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

6 வயது மகனான ஹரி ஹர தீபன் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று இவர்களது பெற்றோர் வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் இரவு வீட்டின் அருகே உள்ள உறவினரின் வீட்டு மாடியில் சிறுவன் ஹரிஹர தீபன் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் காவல் அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இறந்த சிறுவனின் உடலை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரடியாக சென்று விசாரணை செய்தார் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது.

இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கழுத்தறுத்து கொலை செய்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிறுவனின் உறவினரான சந்திரசேகர் மகன் அஜய்ரத்தினம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது காவல் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே அவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்பொழுது சிறுவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட அஜய் ரத்தினம் சில வாரங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சிறுவனின் அக்காவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பியதாக அஜய் ரத்தினத்தின் மீது காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சமூக வலைதளங்களில் பரப்பியது அஜய்ரத்தினம் என தெரியவந்தது. அப்பொழுது உறவினர்களின் அஜய் ரத்தினத்தின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஹரிஹர தீபனை அஜய்ரத்தினம் கொய்யாக்காய் தருவதாக கூறி அருகில் உள்ள உறவினர் வீட்டு மாடிக்கு அழைத்துச் சென்று இரு கைகளையும் பிடித்துக்கொண்டு வாயில் துணியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்பு எதுவும் தெரியாத போல் அங்கிருந்து சென்று விட்டார். ஹரிஹர தீபன் நீண்ட நேரமாக வீட்டுக்கு திரும்பாததையடுத்து அவரது தாய் சென்று பார்த்தபோது கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

இதையடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கொலை செய்த அஜய்ரத்தினத்தை கைது செய்த போலீசார் மேலும் இக்கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை செய்து வருகின்றனர்.

author avatar
Parthipan K