டெல்லி அரசு ரத்து செய்த உத்தரவு! மீண்டும் முககவசம் கட்டாயம்!

0
124
Order canceled by Delhi government! Masks are mandatory again!
Order canceled by Delhi government! Masks are mandatory again!

டெல்லி அரசு ரத்து செய்த உத்தரவு! மீண்டும் முககவசம் கட்டாயம்!

கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் பொது இடங்கள் மற்றும் வீட்டை விட்டு வெளியே செல்லாத நிலை ஏற்பட்டது.அப்போது முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது.மேலும் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் முக கவசம் என்பது கட்டாயமாக்கப்பட்டது.பொது இடங்களில் தனி மனித இடைவெளி மற்றும் முக கவசம் கட்டாயம் அணித்திருக்க வேண்டும் இல்லை என்றால் அவர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

நடப்பாண்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது அதனால் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு அமல்படுத்த கூடாது என்று கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.மேலும் பெரும்பாலானவர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதால் இனியும் முககவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டாம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று டெல்லி அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் பொது இடங்களில் இனி முக கவசங்கள் அணிவது கட்டாயம் அணிய வேண்டும் இல்லை என்றால் அபரதாம் என்பதை ரத்து என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகளவு கூட்டம் உள்ள இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் எனவும் டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் டெல்லியில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டப்வரகளின் எண்ணிக்கை கடந்த புதன்கிழமை 107ஆக உயர்ந்துள்ளது.488பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.டெல்லி அரசு அந்த விதியை ரத்து செய்த நிலையில் மீண்டும் மூன்று வாரங்களில் முககவசம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K