ஜெயிலில் பா.ரஞ்சித்? நான் அப்படி பேசவில்லை! நீங்கள் அப்படிதான் பேசினீர்கள்! உச்சநீதி மன்றம் அதிரடி!

0
82

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த மாதம் ஒரு மேடை பேச்சின் போது ராஜராஜ சோழன் எம் நிலத்தை பறித்தார் அவருடைய ஆட்சி பொற்காலம் இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார். பின்னர் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து கண்டனத்துக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதை தொடர்ந்து பலரும் இவர் மேல் காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது.

இதை தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள திருப்பனந்தாள் காவல்துறையினர் இயக்குனர் பா.ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பேசியதற்காகவும் வழக்கு பதிவு செய்துனர்.

இது தொடர்பாக இயக்குநர் பா ரஞ்சித் முன்ஜாமீன் வழங்கக் கோரி கும்பகோணம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சித் தரப்பில் வாதாடியதாவது பல்வேறு வரலாற்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களை நான் குறிப்பிட்டேன் இது தொடர்பாக பலரும் பேசி உள்ளனர் ஆனால் என்னுடைய பேச்சை மட்டுமே சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. நான் எந்த வித உள்நோக்கத்துடன் இந்த கருத்தை பதிவு செய்யவில்லை என்று கூறியனர்.

இதையடுத்து நீதிபதி கூறியதாவது பேச்சுரிமையை என்றாலும் அதற்கு வரம்பில்லையா என ரஞ்சித்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மேலும் ராஜராஜசோழன் பட்டியலின மக்களின் நிலத்தை கையகப்படுத்தினர் என எந்த நோக்கத்தில் பேசினீர்கள் எனவும் சரமாறி கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது. பா .ரஞ்சித் மீதான ஆதாரங்களுடன் விரிவான மனு தாக்கல் தருமாறு நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த மாதம் முன்ஜாமீன் கேட்டு ரஞ்சித் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, இதையடுத்து கும்பகோணம் நீதிமன்றத்தில் இயக்குனர் ரஞ்சித் இன்று ஆஜரானர், நாளை முதல் 3 நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவுயிட்டுள்ளது.
காவல் நிலையத்தில் 3 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கும்பகோணம் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

நிபந்தனைப் படி நேற்று, காவல்நிலையத்தில் ஆஜராகி பா.ரஞ்சித் கையெழுத்திட்டார். இதேபோல் இன்றும் தனது ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் சென்று அவர் கையெழுத்து போட்டார்.
முன்னதாக, 3 நாட்கள் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை இரண்டு நாட்களாக குறைக்க வேண்டும் என்று பா.ரஞ்சித் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்றது. இதை அடுத்து பா.ரஞ்சித் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

மாமன்னர் ராஜராஜன் பிகப்பெரிய அரசர் ஆவார். அவருடைய ஆட்சிக்காலம் பொற்காலம் என கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கூறுகின்றது. இவரை நாம் போற்ற வேண்டுமே தவிர தூற்ற கூடாது. அவரின் ஆட்சியில் விவசாயம் நீர்நிலைகள் செழிப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K