திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

0
75
AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!
AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும் பிறகு மூன்றரை ஆண்டுகள் அவர்கள் வேலை செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தின் மூலம் தேர்வாகும் அக்னிபத் வீரர்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தான் பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களின் 6 மாத பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தகுதியான இளைஞர்களை தேர்வு செய்வதற்காக திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் உள்ள டி இ ஏ பப்ளிக்  பள்ளியில் முகாம் ஒன்றும் நடத்தப்பட்டும். இந்த முகாம்  செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியில்லிருந்து அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருப்பூர் மண்டலத்தில் கீழ் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, தேனி, திருப்பூர் போன்ற  மாவட்டங்கள் அடங்கும் ஆகையால் இந்த மாவட்டத்தில் அக்னிபகத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கான இணையதளம் முகவரி  https://WWW.joinindianarmy.nic.in இந்த  இணையதளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு   ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதிக்கு பிறகு அனுமதி கடிதம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆள்சேர்ப்பு முகாமில் ராணுவ பொதுப்பணிகள், எழுத்தர் ,தொழில்நுட்ப பணிகள், பணிமை காப்பாளர் உள்ளிட்ட  பணிகளுக்காக விண்ணப்ப படிவம் வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணியில் சேர வயது, கல்வி தகுதி விண்ணப்பிக்கும் முறை போன்றவை கடந்த மாதம் நான்காம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K