மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!

0
75

ஜிஎஸ்டி வரி விதிப்பு கடந்த 2017ஆம் வருடம் ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வந்தது.

இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்ததிலிருந்து மத்திய மாநில அரசுகளுக்கிடையே பனிப்போர் நடைபெற்று வந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆனாலும் முந்தைய அதிமுக அரசு இருந்தபோது மத்திய மாநில அரசுகளுக்கிடையே பனிப்போர் நிலவி வந்தாலும் மக்களுக்கான திட்டத்தில் எந்தவிதமான குறைபாடும் இருந்ததில்லை.

ஆனாலும் அனைத்து விதமான பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்த மத்திய அரசு மாநில அரசுகளின் முரண்பாடுகள் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மற்றும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதற்கு காரணம் இதுவரையில் பொதுமக்கள் அதிக வரி செலுத்துவது பெட்ரோல் மற்றும் டீசல் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்தான் மாநில அரசுகளுக்கு அதிக வருவாய் வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் தான் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதனடிப்படையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 அதேபோல டீசலின் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்திருக்கிறது, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை கணிசமாக குறைத்த சூழ்நிலையில், மாநில அரசுகளும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டுமென நிர்மலா சீதாராமன் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரு வருடத்திற்கு முன்பாகவே குறைத்து விட்டதால் இனி விலை குறைப்பிற்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

பல மடங்கு விலையை அதிகரித்து விட்டு சிறிதளவு மத்திய அரசு குறைத்திருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மேலும் குறைத்து மத்திய அரசு விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தியிறுக்கிறார்.