மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்!

0
80
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். குடும்ப உறவுகளின் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை குறையும் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

வருமானம் எதிர்பார்த்த படி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் அலைச்சல் உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகலாம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகளுக்காக காத்திருப்பார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் மற்றும் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது அவசியம். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாகவும் கவனமாகவும் பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani