திமுக என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேறொரு வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம்! சசிகலா ஆவேசம்!

0
71

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்வாக விசாரித்து வந்த ஆறுமுகசாமி ஆணையம் நேற்று முந்தினம் தன்னுடைய அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனாலும் நேற்றைய தினம் அந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு பதில் தெரிவித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் நியாயம் தோற்காது. உண்மைக்கு என்றும் வலிமை அதிகம். அதைவிட என்னுடைய அக்கா நம்முடைய இதய தெய்வம் அம்மா அவர்கள் என் அருகிலேயே இருந்து நடப்பவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் என்று தெரிவித்து இருக்கிறார்.

என் மீது பழி படுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இதுபோன்று என் மீது பழிபடுவது எனக்கு ஒன்றும் புதிதல்ல என்று தெரிவித்த அவர், எப்போது நான் அம்மா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்றே ஆரம்பமானது இந்த பழிபோடும் படலம் என்று தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக அவருடைய மரணத்தையே அரசியலாக்குகிறார்கள் திமுகவினர் அதற்கு நம் கட்சியினரே பலிகடாவாக தனது தான் வேதனையான ஒன்று என தெரிவித்துள்ளார்.

அதோடு தன்னை அரசியல் இருந்து ஓரங்கட்ட வேண்டுமென்றால் அதற்கு வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம், அதற்கு அம்மாவின் மரணத்தை சர்ச்சையாக்கியதுதான் மிகவும் கொடுமையானது என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போல அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்தவிதமான பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்ற முடிவை மருத்துவ குழுவினர் தான் எடுத்தார்கள். சிகிச்சையும் வழங்கினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அம்மாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க நான் எப்போதும் தடையாக இருந்ததில்லை. அதேபோல அம்மாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்வது குறித்து எந்த தேவையும் ஏற்படவில்லை என்று விளக்கமளித்துள்ளார் சசிகலா.

மேலும் எத்தனை முறை எத்தனை வடிவத்தில் வேண்டுமானாலும் அம்மாவின் மரணம் பற்றி விசாரித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் உண்மை எப்போதும் மாறாது. ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை.

அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் துரதிஷ்டவசமாக நம்மை விட்டு சென்றார் என்பதே எதார்த்தமான உண்மை என்று குறிப்பிட்டுள்ளார் சசிகலா.