தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மின்வெட்டு ஒரு தடையே இல்லை!! 10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய அறிவிப்பு!!

0
115
#image_title

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மின்வெட்டு ஒரு தடையே இல்லை!! 10 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய அறிவிப்பு!!

நாளைய தினம் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்த நிலையில் அவர்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு வழங்கிருக்கும் புதிய உத்திகள்.

 

மே மாதத்தில் வெயிலில் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும்மின்வெட்டின் தாக்கம் மறுபுறமாக தான் இருக்கிறது பத்தாம் வகுப்பு 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்வதற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்ற இந்த சூழ்நிலையில் அவர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய மின்வெட்டு ஒரு தடையாக இருக்கக் கூடாது எனக் கருதி

தமிழக அரசு மூன்று விதமான உத்திகளை அறிவித்திருக்கிறது

 

தற்போது பத்தாம் வகுப்பு 11ஆம் வகுப்பு மாணவர்கள் பயின்று வரும் மாவட்டத்திலோ அவர்களது ஊரிலோ மின்வெட்டு ஏற்பட்டால் அவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை

 

உத்தி 1 :

மாணவர்கள் விண்ணப்ப படிவுகளில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தமிழக அரசின் சார்பாக அவர்களது மதிப்பெண்களை தொலைபேசியில் எஸ். எம். எஸ் மூலமாக தெரிவிக்கப்படும் அதன் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்

 

உத்தி 2:

பள்ளி மாணவ மாணவிகள் தான் பயின்ற பள்ளிக்கு சென்று மதிப்பெண்களை தெரிந்து கொள்ளும் விதத்திலும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

உத்தி 3:

மாவட்ட ஆட்சியர் மையத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி இலவசமாக மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ளும் விதமாகவும் வசதிகள் ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி மாணவ மாணவிகள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

author avatar
CineDesk