இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!!

0
79
#image_title

இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் பூசாரி!!! திருச்சி அருகே நடக்கும் வினோத திருவிழா!!!

திருச்சி மாவட்டத்தில் இளம்பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோதமான திருவிழா நடைபெற்ற நிலையில் அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் முசிறியில் வெள்ளப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அச்சப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் வருடந்தோறும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது முதல் நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு மறுநாள் விஜயதசமி நாளன்று பெண்களுக்கு சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் நிகழ்வு நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு அச்சப்பன் கோயிலில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை விஜயதசமி திருவிழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் ஒரு பகுதியாக அச்சப்பன் கடவுளுக்கும் கோயிலில் உள்ள மற்ற பிற தெய்வங்களுக்கும் பக்தர்கள் மகா தீபம் ஏற்றி வழிபட்டனர். மேலும் கோயில் வளாகம் முழுவதிலும் பெண்கள் பழங்கால வைத்து கடவுளை வழிபட்டனர்.

அதன். பின்னர் அச்சப்பன் மற்றும் அகோர வீரபத்திரன் ஆகிய சுவாமி சிலைகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து பக்தர்கள் தோலில் சுமந்து காட்டுக்குள் இருக்கும் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். மேலும் நேர்த்திக் கடன் செலுத்தும் விதமாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது.

அந்த காட்டு கோயிலில் பெண் பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் மண்டியிட்டு கைகளை தூக்கியபடி அமர்ந்தனர். அப்போது அங்கு வந்த கோயில் பூசாரி சாட்டையை வைத்து மண்டியிட்டு அமர்ந்திருந்த பெண்களை கைகளில் அடித்தார். ஒரு சில பெண்கள் நான்கு முதல் ஐந்து சாட்டை அடிகள் வாங்கினர்.

சாட்டையடி வாங்கிய பெண்கள் எழுந்து கோயிலுக்குள் சென்று முகத்தில் தீர்த்தம் தெளித்து கொண்டு விபூதி குங்குமம் பெற்றுக் கொண்டனர். இவ்வாறு சாட்டையடி வாங்குவதால் காத்து கருப்பு, பில்லி, சூனியம், பேய் பிடித்தல் போன்ற கெட்டதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடிகின்றது என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அனைவரும் கடவுளை அடைய வேண்டி சாட்டையடி வாங்கினால் அவர்களின் வேண்டுதல் அப்படியே நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.