அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்… பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு!!

0
49

 

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்… பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு…

 

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி அவர்கள் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

தற்பொழுது ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி 2008ம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார். 2008ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக மனோஜ் திவாரி அவர்கள் 12 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் 3 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

 

அதன் பின்னர் அரசியலில் நுழைந்த மனோஜ் திவாரி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் தலைமையில் உள்ள அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

 

அரசியலில் இருந்த போதிலும் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடி வந்த மனோஜ் திவாரி 2022-23ம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டிகளில் மேற்குவங்க அணிக்காக விளையாடி இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். அதுவே மனோஜ் திவாரி விளையாடிய கடைசி முதல்தர போட்டி ஆகும்.

 

இந்திய அணிக்காக 12 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மனோஜ் திவாரி 287 ரன்கள் குவித்தார். 2011ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அடித்த சதமும் அடங்கும். மனோஜ் திவாரி அவர்கள் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 9908 ரன்கள் குவித்துள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 29 சதங்கள் அடித்துள்ளார். 169 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள மனோஜ் திவாரி அவர்கள் 5581 ரன்கள் குவித்துள்ளார்.

 

கடந்த 2012ம் ஆண்டு ஐபிஎல் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மனோஜ் திவாரி அவர்கள் விளையாடினார். மேலும் இறுதிப் போட்டியில் இறுதி ஓவரில் வெற்றிக் தேவையான ரன்களை அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். இந்நிலையில் மனோஜ் திவாரி அவர்கள் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக அறிவித்துள்ளார்.

 

ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனோஜ் திவாரி அவர்கள் “கிரிக்கெட்டில் இருந்து நான் விடைபெறுகிறேன். இந்த கிரிக்கெட் எனக்கு அனைத்தையும் கொடுத்தது. வாழ்க்கையில் கடினமான சூழ்நிலையில் இருந்த பொழுது நான் நினைக்காதவற்றை இந்த கிரிக்கெட் எனக்கு கொடுத்துள்ளது. நான் எப்பொழுதுமே கிரிக்கெட் மற்றும் கடவுளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த பயணம் முழுவதிலும் கடவுள் எனக்கு உறுதுணையாக இருந்தார்” என்று மனோஜ் திவாரி பதிவிட்டுள்ளார்.