உக்ரைன் மீது தொடர்ந்து பத்தாவது நாளாக போர் தொடுத்து வரும் ரஷியா!

0
74

உக்ரைன் மீது தொடர்ந்து பத்தாவது நாளாக போர் தொடுத்து வரும் ரஷியா!

உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந் தேதி போர் தொடங்கியது. பல உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தியும் ரஷியா அதை கேட்கவில்லை. தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையடுத்து, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை கண்டித்து கடந்த 25-ந் தேதி ஐ.நா. பொதுசபையின் கூட்டத்தில் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, நடைபெற்ற ஐ.நா. பொதுசபையின் சிறப்பு அவசரக் கூட்டத்தில் உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்துள்ள போரை  உடனடியாக நிறுத்தி, அங்கிருந்து ரஷிய படைகள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரின் காரணமாக, லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். இதுவரை உக்ரைன் நாட்டினர் பத்து லட்சம் பேர் வரை அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் பல வெளிநாட்டினர் உள்பட இந்தியர்கள் பலர் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து, இன்று பத்தாவது நாளாக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தொடர்ந்து வருகிறது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் உக்ரைன் நாட்டில்தான் உள்ளது. இந்நிலையில், அந்த அணுமின்நிலையத்தையும் ரஷிய படைகள் நேற்று கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

author avatar
Parthipan K