ஷிகார் தவானுக்கு அப்படி செய்திருக்கக் கூடாது… முன்னாள் இந்திய வீரர் அதிருப்தி

0
102

ஷிகார் தவானுக்கு அப்படி செய்திருக்கக் கூடாது… முன்னாள் இந்திய வீரர் அதிருப்தி

முன்னதாக இந்த தொடருக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். காயம் காரணமாக அவதிப்பட்ட கே எல் ராகுல் நேரடியாக அசியக்கோப்பை தொடரில்தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஜிம்பாப்வே தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த தொடருக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். காயம் காரணமாக அவதிப்பட்ட கே எல் ராகுல் நேரடியாக அசியக்கோப்பை தொடரில்தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஜிம்பாப்வே தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஷிகார் தவான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் சபா கரிம் அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் “கேஎல் ராகுல் ஒரு வீரராக மட்டுமே தொடரில் விளையாடியிருக்க வேண்டும், அவரை கேப்டனாக அல்லது துணை கேப்டனாக ஆக்குவது அவ்வளவு முக்கியமில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு வருகிறார். ஷிகர் தவான், ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய அணியின் மூத்த வீரர் ஆவார். நீங்கள் கேப்டனாக அறிவிக்கப்பட்டவுடன் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷிகர் அணியை சிறப்பாக வழிநடத்தினார் என்பதை நான் கூற விரும்புகிறேன். அவர் பேட்டிங்கிலும் சீராக இருந்தார். பல இளம் வீரர்கள் இடம்பெற்றிருந்த தொடரை இந்தியா ஒயிட்வாஷ் செய்தது. அவரது தலைமையின் கீழ் பலர் சிறப்பாக செயல்பட்டனர். கள அமைப்பாக இருந்தாலும் சரி, உத்தியாக இருந்தாலும் சரி, வியூகமாக இருந்தாலும் சரி, தவான் முழு கட்டுப்பாட்டில் இருந்தார். அவர் இளைஞர்களை ஒரு தலைவராக ஊக்கப்படுத்தினார்.” என்று கூறியுள்ளார்.

அணி விவரம்

கே எல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (து. கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் த்ரிபாட்டி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ஆவேஸ் கான், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.