என் காதல் வெற்றி பெற இந்த மாவட்டம் தான் காரணம்-சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்!!

என் காதல் வெற்றி பெற சேலம் தான் காரணம் பிரிவு உபச்சார விழாவில் மனம் விட்டு பேசிய சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்.

சேலம் மாநகராட்சி ஆணையாளராக உள்ள கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணி மாறுதல் பெற்று செல்கிறார்.இதனையடுத்து சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் மாநகர ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் மாநகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஆணையாளர் கிறிஸ்துராஜுடன் பணியாற்றிய நிகழ்வுகள் குறித்து பரிமாறிக் கொண்டனர்.

அப்போது உரையாற்றிய ஆணையாளர் கிறிஸ்துராஜ் சேலம் எனக்கு மிகவும் பிடித்த மாவட்டம் என்றும் ஏனென்றால் திருமணம் ஆன அடுத்த நாளை நான் சேலம் வந்திருந்தேன் எனவும் கடந்த 2008 ஆம் ஆண்டு நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் எனக் கூறிய அவர்.

அப்போது எனது பள்ளிப் பருவ நண்பர் சபாபதி என்பவர் சேலத்தை சேர்ந்தவர். அவர் சேலம் அரூர் சாலையில் உள்ள வெள்ளையப்பன் கோயிலில் கிடா வெட்டுவதாக ஒரு வேண்டுதல் வைத்திருந்தார்.அது என்னவென்றால் நான் ஆசைப்பட்டபடியே காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டேன் என்றால் கிடா வெட்டுவதாக எனக்கு பதிலாக அவர் வேண்டிக் கொண்டார்.

அதேபோல் எனது மனைவி உஷா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.அதன்படி திருமணம் ஆன அடுத்த நாளை நானும் என் மனைவி உஷாவும் சேலம் வந்தோம் பின்னர் சேலம் அரூர் சாலையில் உள்ள வெள்ளையப்பன் கோவிலில் சொன்னபடி கெடா வெட்டி வணங்கி விட்டுச் சென்றேன் என நெகிழ்ச்சியாக பேசினார்.