ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து

0
119
#image_title
ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து
அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உறுவாக்கி அதிமுகவை வழி நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி கட்சியின் முழுவதையும் எடப்பாடி பழனிசாமி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறினர். அதனையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை அறிவிப்பைக் கொண்டு வருவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்தார்.
பன்னீர்செல்வத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பொதுக்குழுக் கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றார். இதனை பொறுத்து கொள்ள முடியாமல் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்து வந்தார்.
பன்னீர்செல்வம் தொடுத்த வழக்குகள் அனைத்திலும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது, இதனை தொடர்ந்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அதிமுகவின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து ஓபிஎஸ் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனிடையே எடப்பாடிக்கு கிளியை உண்டாக்கும் விதத்தில் இன்று 24-4-23 திங்கட்கிழமை திருச்சியில் தனது ஆதரவாளர்களை கூட்டி மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்று ஓபிஎஸ் கூறி வந்தார்.
மேலும் அந்த மாநாட்டிற்கு சசிகலா மற்றும் தினகரனை அழைத்து தனது செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் இருவரும் மாநாட்டில் பங்கேற்பார்களா என்பது பற்றி இப்போதைக்கு உறுதியாக எதையும் சொல்ல இயலாது, அது பற்றி அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து எடப்பாடியை வீழ்த்துவதற்கு, பன்னீர்செல்வத்துடன் இணைந்து சசிகலாவும், தினகரனும் மாநாட்டில் பங்கேற்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, பன்னீர் செல்வம் சந்திக்க விரும்பினால், நேரம் வழங்குவேன். மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி யோசித்து முடிவு செய்வேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சசிகலா, தினகரன், பன்னீர் செல்வம் மூவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாதி முத்திரை விழுந்துவிடும் என்பதற்காக மாநாட்டை முற்றிலும் தவிர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே இன்று நடைபெறும் மாநாட்டில் தனிக்கட்சி தொடர்பான அறிவிப்பு இடம் பெறும் என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.