இரண்டாவது டெஸ்ட் : முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி திணறல்

0
76

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் இதன் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. மேலும் தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாத இறுதில் இருந்து தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று மாத இடைவெளிக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் முதல் இங்கிலாந்து அணி மீண்டும் விளையாட தொடங்கியது. இதற்கு சம்மதம் தெரிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி இங்கிலாந்து சென்று மூன்று ஒருநாள் தொடரில் விளையாடியது.

இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இரு அணிக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வந்தது. இந்நிலையில் பாகிஸ்தான அணி 85/2 ரன்கள் எடுத்த போது மழை வந்ததால் ஆட்டம் பாதிப்பு அடைந்துள்ளது. மீண்டும் மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இறப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. மழை வந்ததால் முதல் நாளில் 45.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

author avatar
Parthipan K