தாய் மகன் இருவரையும் கொலை செய்த முதியவர் கைது

தாய் மகன் இருவரையும் கொலை செய்த முதியவர் கைது

திருப்புத்தூர் அருகே துவாரில் தாய், மகன் இருவரையும் போதையில் கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள துவார் ஊராட்சிக்கு உட்பட்ட பூமலை கண்மாய் பகுதியில் வசித்து வந்தவர் அடக்கி (46). கணவர் இறந்த நிலையில் 26 வயது மகன் சின்னகருப்பனுடன் வசித்து வந்தார். அடக்கி விவசாய கூலி வேலைக்கும், சின்னகருப்பன் பகுதி நேர ஓட்டுனராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 27 ம் தேதி தாய் மகன் இருவரும் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில்

வீட்டு வாசலில் தாய் அடக்கியும், மகன் சின்னகருப்பன் கட்டிலிலும் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த திருந்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்து அப்பகுதி மக்கள் நெற்குப்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெற்குப்பை காவல் ஆய்வாளர் ரவீந்திரன் தலைமையில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு இருவரின் உடல்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் திருப்புத்தூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் பூலாங்குறிச்சி அருகே உள்ள புதுவளவு கிராமத்தை சேர்ந்த சின்னையா என்ற சுழியன் (65) என்பவரை கைது செய்துள்ளனர்.

போலீசார் விசாரணையில் சின்னையா என்பவருக்கும் இறந்த சின்ன கருப்பனுக்கும் இடையே கடந்த சில தினங்களாக பிரச்சனைகள் நடந்து வந்ததாகவும், இதன் காரணமாக மதுபோதையில் இருந்த சின்னையா மண்வெட்டி கைபிடியால் 26ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்த சின்னகருப்பனை கழுத்தில் அடித்து கொலை செய்துள்ளார்.

அதை பார்த்து வந்த தாய் அடக்கியையும் அடித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து சின்னையாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.