இவ்வளவு உதவிகளை செய்திருக்கிறாரா சிவாஜி?

0
116
#image_title

நடிப்பின் திலகம், நடிப்பின் நாயகன், நடிப்பின் அசுரன், நடிப்பில் வள்ளல் என அத்தனை பட்டமும் அவருக்கு பொருந்தும். இன்றைக்கும் சிவாஜி அவர்களின் படம் என்றால் நமக்கு அதை பார்க்கும் பொழுது அவ்வளவு வியப்பாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கேரக்டர்களிலும் தனது நடிப்பினை வெளிக்காட்டி, தனது திறமையை வெளிக்காட்டி, ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கதாபாத்திரங்களை எடுத்து, புதுப்புது நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் என்றால் அதில் ஐயமே இல்லை.

 

இன்றைக்கும் சிவாஜி பெரிதா? எம்ஜிஆர் பெரிதா? என்ற போட்டிகள் இணையதளத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இறந்தும் வாழும் மனிதர்களில் இருவர்களுமே தோற்கவில்லை.

 

எம்ஜிஆர் பல உதவிகளை பலருக்கு செய்வார். அவர் வீட்டிற்கு சென்றவர்கள் சாப்பிடாமல் திரும்பியது இல்லை என எத்தனையோ எம்ஜிஆர் உதவி செய்திருக்கிறார் என்ற செய்திகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

 

சிவாஜி எந்தெந்த உதவிகளை செய்துள்ளார் என்பதை பற்றி தெரியுமா.

 

சிவாஜி செய்த பல உதவிகள் யாருக்குமே தெரியாது. பலமுறை, பல சூழ்நிலைகளிலும் பலருக்கும் உதவியிருக்கிறார். சில படங்களுக்கு சம்பளம் வாங்காமல் கூட நடித்திருக்கிறார்.

 

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் வந்த போது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தன் வீட்டிலிருந்த அனைத்து நகைகளையும் அப்படியே அள்ளிகொடுத்தவர் சிவாஜி. இன்றைய மதிப்பில் அது ரூ.300 கோடிக்கும் மேல் இருக்கும்.

 

அதேபோல், ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் நாடக நடிகராக நடித்திருப்பார். இந்த படத்தில் பல வேஷங்களில் வருவார். அதில், திருப்பூர் குமரன் வேடமும் ஒன்று. இந்த படத்தை பார்த்த திருப்பூர் குமரனின் மனைவி சிவாஜியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். அப்போது அவரின் குடும்ப சூழ்நிலையை புரிந்துகொண்ட சிவாஜி பல வகைகளிலும் அந்த குடும்பத்திற்கு உதவியிருக்கிறார்.

 

இதே போல் 1960 ஆம் ஆண்டு சென்னையில் பயங்கரமான வெள்ளம் வந்துள்ளது. அப்பொழுது ஏழை மக்கள் உணவிற்காக படாத பாடு பட்டிருக்கின்றனர். தனது மக்கள் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்று நினைத்த சிவாஜி கணேசன். அவரது வீட்டிலேயே பெரிய பெரிய பாத்திரங்களை வைத்து அவரது மேற்பார்வையில் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் உணவளித்தார்

ஆனால், சிவாஜி செய்த உதவிகள் வெளியே தெரியாமல் போனது.மேலே சொன்ன உதாரணங்களே போதுமானது.

 

author avatar
Kowsalya