இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!! முதல்வரின் ஒரே கையெழுத்தில் இன்று ஒப்பந்தம்!!

0
72

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று சென்னையில் 17 ஆயிரத்து 297 கோடி மதிப்பிலான 33 திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. ஒப்பந்தங்கள் மட்டுமின்றி 14 திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று கையெழுத்திட உள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இரண்டு மாத காலமாக தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு அதிரடி முடிவுகளை எடுத்துக் கொண்டு வந்தார். மேலும் நீட் தேர்வு ரத்து மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் மேகதாது அணை விவகாரம் போன்றவைகளுக்கு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மாநில வளர்ச்சி மறுசீரமைப்பு செய்து அனைத்து துறைகளும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க வழி வகுக்கிறார். மேலும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் வண்ணம் புதிய தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும் ஏற்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது 17ஆயிரத்து 297 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.

சென்னையில் கிண்டி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகள் சேர்ந்த 33 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும் ஸ்டாலின் முன்னிலையில் 17 ஆயிரத்து 297 கோடி ரூபாய் மதிப்பிலான 33 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. ஆட்டோமொபைல் மற்றும் காற்றாலை, சரக்கு போக்குவரத்து போன்ற பல துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

54 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. Capital land, Adhani,JSW,ZF-WABCO போன்ற நிறுவனங்கள் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளன. மேலும் இது தவிர 14 திட்டங்களுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.

author avatar
Jayachithra