happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள்!

happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள்!

சென்னை, பெரம்பூர் பகுதியில் நடைப்பெற்று வரும் happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசம் பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள். சென்னை மாநகரத்தின் சமீபத்திய டிரெண்டாக ‘Happy street’ நிகழ்ச்சிகள் உருவாகி உள்ளன. சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் போக்குவரத்து மற்றும் ஞாயிறு விடுமுறையை கொண்டாடும் வகையிலும் இந்த happy street நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தொடர்ந்து இந்நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. … Read more

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்!

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்!

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்! கடந்த இரண்டு நாட்களாக சமுக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெரும் விவாத பொருளாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் விவகாரம் உள்ளது. அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலில் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை இது முதல் கட்டமாக வெளியிடப்பட்ட பட்டியல், இரண்டாம் கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் மொத்தம் நான்கு கட்டமாக வெளியிட போவதாகவும், தமிழகத்தில் ஆட்சியில் … Read more

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸ்!! நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை!!

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸ்!! நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை!!

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸுக்கு நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தென்னமரச் சாலையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்படவில்லை. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் சர்க்கஸ் கொட்டகைக்கு சீல் வைத்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் சர்க்கஸ் நடத்த … Read more

அதிமுக செயற்குழு! எடப்பாடிக்கு முழு அதிகாரம்!!

அதிமுக செயற்குழு! எடப்பாடிக்கு முழு அதிகாரம்!!

அதிமுக செயற்குழு! எடப்பாடிக்கு முழு அதிகாரம்!! அதிமுகவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு அக்கட்சியில் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு முழு அதிகாரம் தரும் வகையில் இன்று அதிமுக செயற்குழு உறுப்பினர் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. அதிமுக தலைமை கழகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் … Read more

சாலைகளில் பயன்படுத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு!

சாலைகளில் பயன்படுத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு!

புதுக்கோட்டையில் நகர் பகுதியான நிஜாம் காலனியில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் சிரஞ்சீகள் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இளைஞர்கள் போதை ஊசிக்காக பயன்படுத்தினதா அல்லது மருத்துவ கழிவுகளா என்பது குறித்து சுகாதாரத்துறை விசாரணை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் வேளையில் புதுக்கோட்டை நிஜாம் காலனி பகுதியில் சாலை ஓரத்தில் 1000க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட ஊசிகள் சிரஞ்சுகள் ஆகியவை கொட்டப்பட்டுள்ளன. அங்குள்ள … Read more

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்!

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்!

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள். பெரிய மீன்களின் விலை அதிகரித்தும் சிறிய மீன்களின் விலை குறைந்த நிலையிலும் விற்பனை. தமிழகத்தில் மீன்களின் இனபெருக்க வளர்ச்சி காரணத்திற்காக ஏப்ரல் 15முதல் ஜீன் 14 வரை தடைகாலமானது கடைபிடிக்கப்படும் இந்த கால கட்டத்தில் விசைப்படகுகள் ஏதும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாது. இந்நிலையில் நேற்று இந்த தடைகாலமானது தொடங்கிய நிலையில் இன்று ஏற்கனவே கடலுக்கு … Read more

மெடிக்கல் கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இரண்டு பேர் கைது!

மெடிக்கல் கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இரண்டு பேர் கைது!

கள்ளக்குறிச்சி அருகே மெடிக்கல் கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இரண்டு பேர் அதிரடியாக கைது;கடைக்கு சீல் வைப்பு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே மாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள ஒரு மருந்தகத்தில் வட்டார மருத்துவர் பாலதண்டபாணி தலைமையில் சுகாதாரத்துறையினர் மற்றும் கச்சிராயப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அந்த மருந்தகத்தை நடத்தி வந்த விஜய் (27) என்பவர் மருத்துவ படிப்பு படிக்காமலே பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் … Read more

பெரவள்ளூரில் டம்மி துப்பாக்கி வைத்து ஆட்டோ ஓட்டு நரை மிரட்டிய வாலிபர் கைது!!

பெரவள்ளூரில் டம்மி துப்பாக்கி வைத்து ஆட்டோ ஓட்டு நரை மிரட்டிய வாலிபர் கைது!!

பெரவள்ளூரில் டம்மி துப்பாக்கி வைத்து ஆட்டோ ஓட்டு நரை மிரட்டிய வாலிபர் கைது. சென்னை, பெரவள் ளூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (45) ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று இரவு பியூலா என்ற நபரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பெரவள்ளூர் நோக்கி வந்துள்ளார். அப்போது ஆட்டோ கட்டணமாக ரூ.80 கேட்டுள்ளார். அதற்கு பியூலா ரூ.50 தான் தரமுடியும் என்று ஆட்டோ ஓட் டுனரிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பியூலா தனது மகன் … Read more

தேனி அருகே நகை அடகு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி!

தேனி அருகே நகை அடகு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி!

தேனி அருகே நகை அடகு கடையில் கொள்ளை அடிக்க முயற்சி. நகைக்கடையின் அருகே இருந்த சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கி சிசிடிவி கேமராவை எடுத்துச் சென்ற திருடன். சிசிடிவி காட்சிகள் உள்ளது. தேனி அருகே உள்ள ஸ்ரீரங்கபுரம் கிராமத்தில் ஸ்ரீ சக்தி ரேணுகா என்ற பெயரில் நகை அடகு கடை செயல்பட்டு வருகிறது. இந்த அடகு கடையை பூட்டிவிட்டு அதன் உரிமையாளர் வீடு சென்ற நிலையில் இந்த அடகு கடையினை கொள்ளை அடிக்க திட்டமிட்ட வந்த ஒரு … Read more

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட்!!

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட்!!

ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட். பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் ஐந்து வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது, மேலும் சுட்டு கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் வனவாசி பகுதியை சேர்ந்த கமலேஷ் என்பதும், மற்றொருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் குமார் என்பதும் ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ராணுவ வீரர்கள் … Read more