சென்னை ஏரிகளின் நீர் இருப்பு கிடுகிடு உயர்வு! வெளுத்து வாங்கும் கனமழை!

0
113

சென்னையில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான ஏரிகள் மற்றும் நீர் தேக்கங்கள் நிரம்பியுள்ளனர் இதனால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் மூன்று மணி அளவில் நிரம்பப்பட உள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது அதிகபட்சமாக திருவொற்றியூரில் 20 சென்டிமீட்டர் மழை பதிவானது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. ஆகவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

அதிகபட்சமாக திருவொற்றியூரில் 20 செண்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 11.2 சென்டிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 8.2 சென்டிமீட்டர் மழையும், நந்தனத்தில் 8.7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தலைநகர் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 2692 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. வினாடிக்கு 967 கன அடி மழை நீர் வரத்து இருக்கிறது சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக 159 காண அடி நீர் வினாடிக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

புழல் ஏரி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், பூண்டி உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகளும் தன்னுடைய முழு கொள்ளளவை நெருங்கி உள்ளனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 17 ஏரிகள் முழுவதும் நிரம்பியது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மதியம் 3 மணி அளவில் நீர் திறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதல் கட்டமாக 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்க்கும் விதத்தில் முன்கூட்டியே உபரி நீர் திறக்கப்படவுள்ளது.