ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! கேரளா – சென்னை!
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் கேரளாவில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் வரும் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகள் கேரளா சென்று வருவதற்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை வரும் 25ம் தேதி முதல் செப் 6ம் தேதி வரை இயக்குகிறது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கண்ணூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. … Read more