நாளை அமெரிக்கா பயணமாகிறார் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை! எதற்காக தெரியுமா?

0
91

சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்தார்.

அதன் பிறகு காவல்துறை அதிகாரி பதவியை ராஜினாமா செய்த அவர், தமிழகத்திற்கு வந்து பாஜகவில் இணைந்தார். அந்தக் கட்சியில் அவருக்கு முதலில் மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.

அதன் பிறகு பாஜகவின் மாநில தலைவராக இருந்த தற்போதைய மத்திய இணையமைச்சர் எல். முருகன் மத்திய அமைச்சரான பிறகு தமிழக பாஜகவின் தலைவர் பதவி காலியானது. ஆகவே புதிய தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார்.

இதன் பிறகு அவருடைய செயல்பாடுகள் வேறு மாதிரியாக இருந்தது. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சிகள் கூட கண்டுகொள்ளாத பல விஷயங்களை சுட்டிக்காட்டி ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கினார்.

அதிலும் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவருடைய செயல்பாடு இன்னும் வேகம் எடுத்து விட்டது. தமிழகத்தில் எதிர்க்கட்சி அதிமுகவா? அல்லது பாஜகவா? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு தற்போது பாஜகவின் செயல்பாடு இருக்கிறது.

போதாக்குறைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் அணிவகுப்பை நடத்துவதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கி விட்டது. முன்பை விட வேகமாக தமிழகத்தில் பாஜக  வளர்ச்சி அடையும் என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் பாஜக மட்டுமல்லாமல் இனி ஆர் எஸ் எஸ் அமைப்பும் தமிழகத்தில் துளிர்விட வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை இரண்டு வார கால பயணமாக நாளைய தினம் அமெரிக்கா செல்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி அண்ணாமலை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு சென்ற அண்ணாமலை இலங்கைத் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என்று பலரையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில் அண்ணாமலை நாளைய தினம் அமெரிக்காவிற்கு பயணமாகிறார்.

ஆனால் ஒரு மாநிலத்தின் கட்சித் தலைவர் என்ற பதவியில் இருப்பவர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோதே அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள விரும்பினார். ஆனால் அப்போதைய அமெரிக்க அரசு அவருக்கு அனுமதி வழங்க மறுத்தது.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது ஒரு முதலமைச்சரையே தன்னுடைய நாட்டிற்கு நுழைய விடாத அமெரிக்கா தற்சமயம் எந்தவிதமான அரசு பதவிகளிலும் இல்லாத ஒருவரை முதன் முறையாக தன்னுடைய நாட்டிற்கு வருகை தர அனுமதி வழங்கியிருக்கிறது.

ஆனால் அண்ணாமலை தன்னுடைய உயர்கல்வி தொடர்பாகத்தான் அமெரிக்காவிற்கு செல்வதாக சொல்லப்படுகிறது ஆனாலும் அந்த நாட்டில் உள்ள தமிழர்களையும் சந்தித்து உரையாடல் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு அக்டோபர் மாதம் 12ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.

அண்ணாமலை தன்னுடைய சொந்த காரணத்திற்காகவே அமெரிக்கா செல்வதாக வெளியில் தெரிவித்துக் கொண்டாலும் இதில் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது என்று கருதப்படுகிறது ஏனென்றால் அரசாங்கத்தின் மிகப்பெரிய பதவிகளில் இருப்பவர்கள் கூட அமெரிக்காவிற்கு அடிக்கடி செல்ல முடியாது.

ஆனால் ஒரு கட்சியின் மாநில தலைவராக இருந்து கொண்டு அவர் அமெரிக்கா செல்கிறார் என்றால் அது சாதாரண விஷயமாக தெரியவில்லை இதில் மிகப்பெரிய அரசியல் ஆதாயம் அடங்கியிருப்பதாகவே தெரிவிக்கிறார்கள்.