இந்தியாவில் சிறந்த ஆட்சி செய்யும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு வந்த இடம் !!

0
72

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பொது விவகாரங்களுக்கான மையம் ( public affairs centre) , ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது.

இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கஸ்தூரி நந்தன் தலைமையிலான இந்த மையம், தற்போது இந்த ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது . அதில் நாட்டிலேயே சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களில் ஆட்சி மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட அடிப்படைக் கருத்துக்களை கொண்டு ஆண்டிற்கு ஒருமுறை பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இந்த ஆண்டிற்கான பட்டியல் நேற்று வெளியானது . அதில் பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மூன்று வகைப்படுத்தப்பட்டு பட்டியல்களை பொது விவகாரங்களுக்கான மையம் வெளியிட்டது.

அதில் இந்தியாவில் சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் முதல் இடமாக கேரளா மாநிலம் 1.389 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடம் பிடித்த தமிழகம் 0.912 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

மேலும் ஆந்திர பிரதேஷ -0.531 ,கர்நாடகா – 0.467, சட்டீஸ்கர் – 0.429,
தெலுங்கானா – 0.388,  மகாராஷ்டிரா – 0.143  ,பஞ்சாப் – 0.093, குஜராத் – 0.053,
மத்திய பிரதேசம் – 0.345 என்ற புள்ளிகளுடன் உள்ளது.

author avatar
Parthipan K