அமைச்சர் மா சுப்ரமணியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு உள்ளதா?

0
95
The announcement made by Minister Ma Subramaniam! Is there a monkeypox problem in Tamil Nadu?
The announcement made by Minister Ma Subramaniam! Is there a monkeypox problem in Tamil Nadu?

அமைச்சர் மா சுப்ரமணியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு உள்ளதா?

சென்னை  தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழகத்தில் இதுவரை 97 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தற்போது  செலுத்திக் கொண்டுள்ளனர்.

மேலும் இரண்டாம் தவனை தடுப்பூசியை பொருத்தவரை 85 சதவீத பேர் செலுத்தியுள்ளனர். மேலும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தமிழகத்தில் சிறப்பு தடுப்புசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும்  வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி சிறப்பு தடுப்பூசி மூலம் நடைபெற உள்ளது கல்லூரிகள் போஸ்டர் தவணை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் குரங்கு  அம்மை அறிகுறி என்று வெளியான தகவலில் உண்மை இல்லை. மேலும் குரங்கம்மை குறித்து ஊடகங்கள் பரப்பும் செய்தியை நம்ப வேண்டாம். எனவும்  தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை  பாதிப்பு இல்லை.

மேலும் வெளிநாடுகளில் மருத்துவ படிக்க செல்லும் மாணவர்கள் படிப்பு முடித்து திரும்பிய பிறகு ஓராண்டு பயிற்சி பெற வேண்டும் அதற்கு கட்டணமாக மூன்று லட்சம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கும் மருத்துவமனைக்கு  இரண்டு லட்சமும் என மொத்தம் ஐந்து  லட்சம் செலுத்த வேண்டும் எனவும் கூறியிருந்ததை  அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார் . மேலும்   இந்த கட்டணமானது மிகவும் அதிகமாக இருக்கிறது எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கையை நினைவில் கொண்டு  முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனையின் படி அந்த தொகையை 29 ஆயிரத்து 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும்  வெளிநாட்டிலிருந்து  மருத்துவ படிப்பு முடித்து இந்தியா வருபவர்களுக்கு தொடர் பரிசோதனை  செய்து வருகிறோம் என்று கூறினார் . மேலும் உக்ரைன்ல்லிருந்து  திரும்பிய மாணவர்கள் இந்தியாவிலேயே அவர்களின் படிப்பை தொடர்வதற்காக மத்திய அரசு பிறப்பிக்கும் உத்தரவு காத்திருக்கிறோம் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இல்லை என்றும் கூறி அவரது உரையை முடித்தார்.

author avatar
Parthipan K