மதுரை சித்திரை திருவிழாவில் நடந்த கொடூரம்..அலறியடித்து ஓடிய பக்தர்கள்..!!

0
786
The brutality that happened in Madurai Chitra festival
The brutality that happened in Madurai Chitra festival

மதுரை சித்திரை திருவிழாவில் நடந்த கொடூரம்..அலறியடித்து ஓடிய பக்தர்கள்..!!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். பச்சை பட்டுடுத்தி எழுந்தருளிய கள்ளழகரை கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

இப்படி ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு கொடூர சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதன்படி, சித்திரை திருவிழாவை காண வந்த இளைஞர்களில் சிலர் வைகை ஆற்றுக்குள் இறங்கி இரண்டு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென கத்தி, பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு மோசமாக சண்டையிட்டுள்ளனர்.

இதில் மதுரை ஆழ்வார்புரத்தை சேர்ந்த கார்த்திக், சிவகங்கையை சேர்ந்த சோனை ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் கத்திக்குத்து பட்ட இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருவரில் சோனை என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். மதுரை சித்திரை திருவிழாவில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.