குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..!

0
314
#image_title

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..!

38 மாவட்டங்களை கொண்ட தமிழ்நாட்டில் மேலும் சில மாவட்டங்கள் உதயமாக இருக்கின்றது. நிலப்பரப்பு, நிர்வாக வசதிகளை கருத்தில் கொண்டு முக்கிய நகரங்கள்… மாவட்டங்கள்… என்ற அந்தஸ்திற்கு உயர்கின்றது.

அதுமட்டும் இன்றி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இவை இருந்து வரும் நிலையில் தற்பொழுது அவை செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது.

தமிழகத்தில் தற்பொழுது 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக உள்ளது. இதன் மூலம் தமிழகம் 46 மாவட்டங்களை கொண்ட வலிமையான மாநிலமாக உருவெடுக்கும்.

புதிதாக உதயமாக உள்ள மாவட்டங்கள்…

1)ஆத்தூர்
2)கும்பகோணம்
3)பொள்ளாச்சி
4)பழனி
5)கோபிச்செட்டிபாளையம்
6)ஆரணி
7)கோவில்பட்டி
8)விருத்தாச்சலம்

நாளை (ஜனவரி 26) நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் நிகழ இருக்கின்றது. குடியரசு தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து ஆத்தூர்… மாவட்டம் என்ற அந்தஸ்த்தை பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

ஆத்தூர் மாவட்டம்: ஆத்தூர், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, வாழப்பாடி, கங்கவள்ளி உள்ளிட்ட தாலுகாக்களை உள்ளடக்கிய மாவட்டமாக ஆத்தூர் உருவாக உள்ளது.

சேலம் மாவட்டம்: சேலம், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் ஆகிய தாலுகாக்களை கொண்ட மாவட்டமாக சேலம் மாற உள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை ஆத்தூர் மாவட்டமாக உதயமானால் தமிழகத்தில் 38 இல் இருந்து 39 ஆக மாவட்டங்களின் எண்ணிக்கை உயரும்.

சேலத்தை பொறுத்தவரை எடப்பாடி முக்கிய நகரமாக இருந்து வருகிறது. இதனால் எடப்பாடிக்கு மாவட்ட அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில்… எடப்பாடிக்கு பதில் அத்தூருக்கு மாவட்ட அந்தஸ்து வழங்கப்ப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.