புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா!! மலையேற இத்தனை பக்தர்களுக்கு தான் அனுமதி!! 

0
79
The famous Karthigai Deepa festival!! Only so many devotees are allowed to climb the mountain!!
The famous Karthigai Deepa festival!! Only so many devotees are allowed to climb the mountain!!

புகழ்பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா!! மலையேற இத்தனை பக்தர்களுக்கு தான் அனுமதி!! 

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலையேறுவதற்கு குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. சிவபெருமான் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா மிகவும் புகழ்பெற்றது.

இந்த வைபவத்தின் போது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கூட லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தீபத் திருவிழாவை கண்டு அண்ணாமலையாரின் அருள் பெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்து கூட பக்தர்கள் வருகை புரிவது சிறப்பு.

இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை கார்த்திகை மாதம் பிறப்பதால் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து இதில் மிக முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வருகின்ற 26 -ஆம் தேதி அதிகாலையில் மலை உச்சியில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், குடிநீர், மற்றும் போக்குவரத்து, உள்ளிட்ட வசதிகள் செய்து தருவது தொடர்பான ஆய்வு கூட்டம், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, ஆகியோர் கொண்ட குழு உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றும் நிகழ்வை காண மலை ஏறுவதற்கு சுமார் 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதிச்சீட்டு இல்லாதவர்களுக்கு மலையேற தடை விதிக்கப்படும் என்றும் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் தெரிவித்தார்.