ஆசியக் கோப்பை 2023 தொடர்… அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்… 

0
37

ஆசியக் கோப்பை 2023 தொடர்… அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்…

 

நடப்பாண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான நேபாள அணியை நேபாள கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றது.

 

இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றது. இந்நிலையில் ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கான அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றது.

 

ஆசியக் கோப்பை 2023ம் ஆண்டில் விளையாடும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் விளையாடும் நேபாள அணியை நேபாள கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

நீண்ட நாட்களுக்கு பிறகு நட்சத்திர பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சானே ஆசிய கோப்பைக்கான நேபாள அணியில் இடம்பெற்றுள்ளார்.

 

நேபாள கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் “ஆசியா கப் 2023 தொடருக்கான இறுதி நேபாள அணியை அறிவித்துள்ளோம். நேபாள அணி ஒரு வாரத்திற்கு முன்னரே பாகிஸ்தான் சென்று அங்கு பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிர்ணயம் செய்துள்ள அணிகளுக்கு எதிராக நேபாள அணி விளையாடவுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

 

ஆசியக் கோப்பை 2023 தொடருக்கான நேபாள அணி…

 

 

ரோகித் பௌடல்(கேப்டன்), ஆசிப் ஷேக்(விக்கெட் கீப்பர்), ஆரிப் ஷேக், குஷால் புர்டெல், குஷால் மல்லா, பீம் ஷர்கி, திபேந்திர சிங் ஐரி, சோம்பால் கமி, குல்ஷன் ஜா, கரண் கேசி, லலித் ராஜ்பன்ஷி, சந்தீப் லமிச்சானே, ஷியாம் தாகல், பிரதீஷ் ஜிசி, சுந்தீப் ஜோரா, அர்ஜூன் சவுத், கிஷோர் மஹதோ