கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!!

0
102
#image_title

கிலோ மூன்று ரூபாய்க்கு வந்த தக்காளியின் விலை!!! சாலையில் கொட்டிச் சென்ற விவசாயிகள்!!!

கடந்த இரண்டு மாதங்களாக கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த தக்காளி தற்பொழுது தக்காளியின் விலை கிலோ மூன்று ரூபாய்க்கு வந்ததால் தக்காளிகள் அனைத்தையும் விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனர்.

தக்காளியின் வரத்து கடந்த இரண்டு மாதங்களாக குறைந்தது. இதனால் தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மாநில அரசுகளும் தக்காளியின் விலையை கட்டுப்படுத்த பல முயற்சிகளை எடுத்து வந்தது. மேலும் தமிழக அரசு ஒரு கிலோ தக்காளியை 60 ரூபாய்க்கு ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்தது.

தக்காளியின் விலை 200 ரூபாயாக இருந்த சமயத்தில் மக்களில் சிலர் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் வங்கி சமையலுக்கு பயன்படுத்த தொடங்கினர். இதையடுத்து கடந்த சில நாட்களாக சந்தைகளுக்கு தக்காளியின் வரத்து அதிகமாக தொடங்கியதால் தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து கிலோ 10 ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்பொழுது ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலை கிலோ மூன்று ரூபாயாக குறைந்துள்ளது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டிச் சென்ற அவலம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தக்காளி விளைச்சல் அதிகமானதால் ஆந்திர மாநிலம் நந்தியா பகுதியில் உள்ள பியாபலி சந்தையில் தக்காளி வரத்து அதிகமாகத் தொடங்கியது. விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த தக்காளிக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.

இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் சாலையோரங்களில் தக்காளியை கொட்டி சென்றனர். மேலும் சில விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளியை பறித்து தங்கள் கால்நடைகளுக்கு உணவாக அளித்தனர்.

தக்காளியை சாலையில் கொட்டிய விவசாயிகள் “கடந்த இரண்டு மாதங்களுக்கு தக்காளி விளைச்சல் குறைவாக இருந்ததால் கிலோ 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் தக்காளிக்கு நாங்கள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. தற்பொழுது தக்காளி கிலோ 3 ரூபாய்க்கு விற்பனூ செய்யப்படுகிறது. இதனால் தக்காளி பறிக்கும் கூலி, போக்குவரத்து செலவு ஆகியவற்றிக்கு கூட இந்த விலை பத்தாது. அதனால் தக்காளியை சாலை ஓரம் கொட்டி செல்கிறோம்” என்று கூறினர்.