என் வாழ்க்கை நாசமாக காரணம் அது தான் – நடிகை ரேவதி கண்ணீர்!

0
45
#image_title

என் வாழ்க்கை நாசமாக காரணம் அது தான் – நடிகை ரேவதி கண்ணீர்!

தமிழ் திரையுலகில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி.கடந்த 1983 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘மண் வாசனை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகையாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவரும் பாராட்டும் படியாக இருந்தது.இதனை தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருந்த மோகன்,கார்த்தி,ரஜினி,கமல்,பிரபு உள்ளிட்டோருடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.மௌன ராகம்,தேவர் மகன்,கை கொடுக்கும் கை,ஒரு கைதியின் டைரி,புன்னகை மன்னன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.

இவர் தமிழ்,மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார்.இப்படி இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ரேவதி 17 வயதில் திரையுலக பயணத்தை தொடங்கினார்.மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திரமேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நன்றாக ஆரம்பமான இவர்களுடைய திருமண பந்தம்  வாழ்நாள் முழுவதும் நீடிக்க வில்லை என்பது தான் வருத்தம்.இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டில் இருவரும் விவரத்து கோரி நீதிமன்றத்தை நாடினர்.இதனை தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரேவதி குறித்து பேசி இருக்கிறார்.ரேவதி அவர்கள் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறே திருமணம் செய்து கொண்டதது தான் என்று தன்னுடைய வேதனையை கண்கலங்கியபடி அவருடைய நண்பர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்வில் நான் பல இன்னல்களுக்கு ஆளானேன். இதனால் தான் விவாகரத்து பெற்றுக்கொண்டேன்.தன் வாழ்க்கையில் திருமணம் செய்தது தான் பெரிய தவறு என்பதை தற்பொழுது உணர்ந்துள்ளேன் என்று கண்ணீர் சிந்தியபடி கூறினார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார்.ரேவதி அவர்கள் தாயாக வேண்டும் என்று ஆசைப்பட்டு தனது 47 வயதில் டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் மஹி என்ற குழந்தையை பெற்று வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.