கண்ணதாசனுக்கும் வாலிக்கும் நடந்த ஒரே சம்பவம்!

0
2835
#image_title

கண்ணதாசனுக்கும் வாலிக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது. அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

 

அந்த காலகட்டத்தில் முன்னணி கவிஞர்களின் மிகவும் பிரபலமானவர்கள் வாலியும், கண்ணதாசனும். கண்ணதாசன் மிகவும் பீக்கில் இருந்தார். அதேபோல் வாலியும் திரைப்பட உலகத்தில் நுழைந்த தனக்கேற்ற இடத்தை பெற்றிருந்தார்.

 

அப்படி இந்த இருவருக்கும் ஒரே மாதிரியான சம்பவம் நடந்துள்ளது.

 

என்னதான் பாடல்கள் வெற்றி பெற்றாலும் அதற்கு கூட வார்த்தை மற்றும் அதன் நுணுக்கங்கள் மக்களிடையே போய் சேரும் வண்ணம் இருக்க வேண்டும். வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்தும் அவர்களுடைய கற்பனை திறனை வைத்தும் கவிதை திறனை வைத்தும் தமிழ் முனைப்பும் கொண்டு நல்ல பாடல்களை நல்ல வாழ்வியல் நோக்கங்கள் கொண்ட கருத்துக்களை மக்களுடைய பாடல்கள் மூலம் சேர்த்தார்கள்.

 

அந்த சமயத்தில் அவர்கள் எழுதிய பாடல்களை அவர்களுக்கே அடையாளம் தெரியாமல் போய் உள்ளது. இப்படி இசையமைப்பாளர்கள் நடுவில் ஏதாவது ஒரு வார்த்தைகளை சொருகிவிடும் பொழுது அதுவே பாடலுக்குரிய அடையாளமாக மாறி வெற்றி பெற்றுள்ளது.

 

, இயக்குனர் தயாரிப்பாளர், கதாசிரியர், உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கி இருந்தார்.

 

அந்த வகையில், 1966 ஆம் ஆண்டு வெளியான ஒரு படத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 1966 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் ஜெயலலிதா ஜோடியாக நடித்து வெளியான படம் தான் குமரிப்பெண்.

 

இந்த படத்தில் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் இளைஞனை நகரத்து மாடர்ன் பெண்களை கிண்டல் செய்வது போல் அமைந்த இந்த பாடல் தான் வருஷத்தை பாரு 66, உருவத்தை பாரு 26 என்ற பாடல். கவியரசர் கண்ணதாசன் இந்த படத்திற்கான அத்தனை பாடல்களையும் எழுதியிருந்தாலும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதற்கு வேறு காரணமும் உண்டு. அதற்கு முக்கிய காரணம், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் தான்.

 

இந்த பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு கண்ணதாசன் சென்று விட்டாராம். இந்த பாடலை மெருகேற்றும் நோக்கத்தில் ‘ஜின்ஜின் நாக்கடி’ என்ற வார்த்தையை சேர்த்துவிட பாடல் பெரிய வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல் ‘வருஷத்தை பாரு 66’ என்ற வரிகள் மறந்து ‘ஜின்ஜின் நாக்கடி’ என்ற வரிகளே பாடலின் அடையாளமாக மாறியுள்ளது.

 

இந்த மாதங்கள் கழித்து வேறு படத்திற்காக கண்ணதாசனை பாடல் வரிக்காக அணுகிய பொழுது, அப்பொழுது ஜின்ஜின் நாக்கடி போல பாடல் எழுதி தாருங்கள் என்று கேட்டுள்ளார்கள். அவரே நான் ஜின்ஜின் நாக்கடி பாடலை எழுதி இருந்தேனா என்று அவரே குழம்பி உள்ளார். அப்பொழுதுதான் குமரிபெண் படத்தில் எழுதிய பாடல் என்று சொல்லும் பொழுது தான் அதுவா அது நான் எழுதவில்லை இசையமைப்பாளர் மெருகேற்றும் வகையில் சேர்த்திருப்பார். அதை நான் சேர்க்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

 

அதேபோல் ஏ.சி. திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘பத்திரகாளி’ படத்தில் பிராமண குடும்பத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்து கவிஞர் வாலி எழுதிய பாடல் தான் ‘கேட்டேலா அங்கே அதை பார்த்தேலா இங்கே’ என்ற பாடல். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, இன்றளவும் அந்த பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. அதற்கு காரணம் இடையில் வரும் ‘வாங்கோண்ணா வாங்கோண்ணா’ என்ற வரிகள் தான் பாடலின் அடையாளமாக மாறியுள்ளது. இதை இசையமைப்பாளர் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாலி எழுத வில்லை.

 

 

author avatar
Kowsalya