வெற்றி வெற்றி சந்திரபாபுவுக்கு வெற்றி! இடைக்கால ஜாமீன் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

0
32
#image_title

வெற்றி வெற்றி சந்திரபாபுவுக்கு வெற்றி! இடைக்கால ஜாமீன் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

ஊழல் வழக்கில் சிறையில் இருந்து வந்த முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு இடைக் கால ஜாமீன் அளித்து ஆந்திர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த பொழுது திறன்மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியதாகவும் இதன் மூலமாக 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து விசாரணை நடத்திய சிபிசிஐடி காவல் துறையினர் சந்திரபாபு நாயுடு அவர்களை கடந்த செப்டம்பர் 9ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராஜமுத்திரி சிறையில் அடைத்தது.

கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக சிறையில் இருக்கும் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஜாமீன் வழங்கக் கோரி ஆந்திர மாநில உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமீன் மனுவை ஆந்திர மாநில உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு அவர்கள் ஜாமீன் கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உச்சநீதி மன்றமும் சந்திரபாபு நாயுடு அவர்களின் ஜாமீன் மனுவை ரத்து செய்தது.

இதையடுத்து சட்டப் போராட்டத்தில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு ஆந்திர உயர்நீதி மன்றம் சில நிபந்தனைகளை விதித்து 4 வாரங்களுக்கு இடைக் ஜாமீன் அளித்து இன்று(அக்டோபர்31) உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அதன்படி சந்திரபாபு நாயுடு அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் யாரிடமும் போனில் பேசக்கூடாது என்றும் ஊடகங்களில் பேசக்கூடாது என்றும், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் மருத்துவமனையை தவிர வேறு எங்கும் செல்லக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அது மட்டுமில்லாமல் சந்திரபாபு நாயுடு அவர்களின் முதன்மை ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 10ம் தேதி நடக்கும் என்றும் தற்பொழுது அளிக்கப்பட்டுள்ள நான்கு வார ஜாமின் காலம் முடிந்த பின்னர் நவம்பர் 28ம் தேதி சந்திரபாபு நாயுடு அவர்கள் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.