ஆடி மாதத்தில் இத்தனை மகத்துவம் உள்ளது! அனைவரும் அறிவோம்!  

0
84
aadi month special in tamil

ஆடி மாதத்தில் இத்தனை மகத்துவம் உள்ளது! அனைவரும் அறிவோம்!

ஒருவரின் வாழ்கையில் பொதுவாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்த மாதங்களாகவே கருதப்படுகிறது அவ்வாறு எல்லா மதங்களும் இறைவனுக்கு உகந்த மாதங்கள் விசேஷமான மாதங்கள் என கூறலாம். மேலும் அதில் சில மாதங்கள் மட்டும் இறைவனுக்கு அதி விசேஷமான மாதங்கள் என கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் இந்த ஆடி மாதம். மேலும் ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யக்கூடாது என கூறுவார்கள். அது வழக்கம் தான்.

 

அற்புதமான மாதம்:ஆடி மாதம் தேவர்களுக்கு உரிய மாதம்மாகும். மேலும் இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறைவனை வழிபடுவதில் கவனம் சிதிலம் அடையும் என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை என ஐதீகம் கூறுகின்றது.

மேலும் அதனால் இந்த மாதத்தை பீடை மாதம் என கூறுவது தவறு, இது ஒரு அற்புதமான மாதமாகவே கருதப்படுகிறது.

ஆடி அமாவாசை சிறப்புகள் மற்றும் விரத முறைகள்ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரிப்பது ஏன் என்றால் அதில் அறிவியலும், ஆன்மிகமும் உள்ளது.

ஏன் ஆடி மாதம் அம்மனுக்கு விசேசம் என்றால் வேப்ப மரம் அம்மனின் அம்சமாக கருத்படுகிறது. மேலும் ஆடி மாதம் அம்மியும் பறக்கும் என்பார்கள். அதனால் ஆடி மாதத்தில் காற்று வழியாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் உண்டு. அதைத் தடுப்பதற்காகவே ஆடி மாதத்தில் வீட்டின் மும் வேப்பங்குலை கட்டி வைப்பது வழக்கம், வேப்ப இலை மிகப்பெரிய கிருமி நாசினி என்பதால் கிருமிகள் வீட்டிற்குள் வருவது தடுக்கப்படும்.

மேலும் அம்பாள் தவம் செய்த மாதம் என்பதால் ஆடி மாத செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், ஞாயிறு கிழமைகளில் கூல் ஊற்றப்படும் நிகழ்வும் நடத்தப்படுகின்றன.

ஆடி அமாவாசை தர்ப்பணம் எங்கெல்லாம் செய்யலாம்… தர்ப்பணம் செய்ய சரியான நேரம் என்ன என்பது பற்றி அறிவது அவசியம் அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, ஆடி பூரம் மிகவும் விசேசமாக பார்க்கப்படுகிறது.

மேலும் விவசாயத்திற்கு தயாராகுதலும் இந்த மாதத்தில் தான் செய்யப்படுகிறது.அந்த வகையில் ஆடி மாதத்தில் பருவ மழை தொடங்குவதால், விவசாயம் செய்ய முன்னோர்கள் தீவிரமாக இருந்தனர். அந்த வகையில் வெயில் அடிக்கும் போது அம்மனை வணங்கினால் நல்ல மழை தருவாள் என்பதால் அம்மனை வணங்கி தன் தொழிலை தொடங்கி வந்தனர் முன்னோர்கள்.அந்த வழியில் தன் தற்போது செய்து வருகின்றார்கள்.

author avatar
Parthipan K