பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!!

0
42

பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் பணப்பரிவர்த்தனை என்றால் மொபைல் மூலமாக ஆன்லைனிலேயே செய்து கொள்கின்றனர்.

ஆனால் பணத்தை டெபிட் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் அங்கிகளுக்கு செல்ல வேண்டும். ஆன்லைன் மூலமாக குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் உங்களால் அனுப்ப முடியும்.

இன்று பணம் கொடுப்பது வாங்குவது போன்ற அனைத்திற்குமே ஆன்லைன் சேவைகளையே மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு செல்வது என்பது பொதுமக்களிடையே பெரும் அளவில் குறைந்துள்ளது.

உங்கள் கையில் உள்ள அந்த ஸ்மார்ட் போனை வைத்து மக்கள் அனைத்தையும் செய்து முடிக்கின்றனர். இதனாலையே பெரும்பாலானோர் வங்கிகளுக்கு செல்வதில்லை.

மேலும் இந்த வங்கி தொடர்பில் உள்ள செக் என்று ஆவணத்தின் மூலம் பல்வேறு முறைகேடுகளும் தவறுகளுமே ஏற்படுகின்றது. இன்னும் சிலருக்கு இதை எவ்வாறு பயன்படுத்துவது என்றே தெரியவில்லை.

இந்த வகையில் சேவிங்ஸ் அக்கௌன்ட் ,கரண்ட் அக்கௌன்ட், சேலரி அக்கௌன்ட் போன்ற எந்த வங்கி கணக்கை தொடங்கினாலும் உங்களுக்கு செக் கொடுக்கப்படும்.

உங்களுக்கு ஒரு நபர் செக் கொடுக்கிறார் என்றால் அவரது அக்கவுண்டில் பணம் இல்லை என்றாலும் அல்லது அவர் பதிவு செய்யும் தகவல்கள் தவறாக உள்ளது என்ற பட்சத்திலும் அந்த செக் செல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு.

இந்த நிலையில் போலியான காசோலையை கொடுத்தால் nagotiable instruments இந்த சட்டத்தின்படி சிறை தண்டனை மற்றும் காசோலையில் பதிவிட்ட மதிப்பை போன்று இரண்டு மடங்கு உரிய நபருக்கு வழங்க வேண்டும்.

இந்த காசோலையில் பல வகை உள்ளது. Bearer cheque இந்த காசோலையை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி அதில் பதிவு செய்துள்ள தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

இரண்டாவது Order cheque இந்த காசோலை யார் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டுமே வங்கியில் கொடுத்து பணத்தை பெற முடியும்.

Cross cheque இந்த காசோலையில் பணத்தை நேரடியாக தர மாட்டார்கள் உங்கள் வங்கி கணக்கில் மட்டும்தான் செலுத்த முடியும். இதையெல்லாம் தெரிந்து கொண்டு செக் கொடுப்பதும் வாங்குவதும் போன்ற அனைத்திலும் கவனமாக இருங்கள்.

author avatar
Parthipan K