இதை பூசினால் கொசு கடிக்கவே கடிக்காது! வண்டுகடி கூட சரியாகும்

0
267
#image_title

கற்பூரவள்ளி இலைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த கற்பூரவள்ளி இலை மாபெரும் மகத்துவம் வாய்ந்தது. இந்த கற்பூரவள்ளி அதேபோல் இதில் ஒரு எண்ணெய் தயாரித்து உடம்பில் வலி இருக்கும் இடங்களில் தடவும் பொழுது வலிகள் மறையும். அதேபோல் இந்த எண்ணையை தேய்த்துக் கொண்டால் உங்களுக்கு கொசுக்கடிக்காது ஏனென்றால் இந்த வாசனை கொசுக்கு பிடிக்காது.

 

இது எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

 

1. முதலில் கற்பூரவள்ளி இலைகளை 20 போல் எடுத்து நன்கு கழுவிக் கொள்ளவும்.

2. இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.

3. இதன் சாறு எவ்வளவு அளவு உள்ளதோ அதே அளவில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும்.

4. ஒரு அடுப்பில் வானலி சட்டியை வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றவும்.

5. சிறிது சூடானதும் அரைத்து வைத்த கற்பூரவள்ளி இலைகளின் கலவையை அதில் போடவும்.

6. நன்கு அந்த எண்ணையுடன் அந்த கலவை சேர்ந்த செட்டா ஆகுவது போல நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.

7. பின் எண்ணையின் நிறம் உங்களுக்கு அடர் பச்சை நிறத்தில் இருக்கும் இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

8. இதை நீங்கள் உங்களது கை கால் மூட்டுகளில் தடவி மசாஜ் செய்யலாம். மேலும் சுவாச பிரச்சனைகளுக்கு இது ஒரு தீர்வாக அமையும். அதுபோல கொசு அதிகமாக இருக்கும் இடத்தில் இதை நீங்கள் தடவிக் கொண்டால் உங்களுக்கு கொசு கடிக்கவே கடிக்காது.

author avatar
Kowsalya