இந்த சூப் மட்டும் போதும்!!குழந்தைகளுக்கு சளி என்பது வரவே வராது!!

0
122
#image_title

இந்த சூப் மட்டும் போதும்!!குழந்தைகளுக்கு சளி என்பது வரவே வராது!!

சளி என்பது எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். ஒரு நோய்வாய்ப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மும் போது, பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீர் அல்லது சுவாசத் துளிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் பாதிக்கப்படலாம். சளி விரைவாக பரவுகிறது, எனவே இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது. மனித உறுப்புகளில் மிகவும் சுலபமாக கிருமி தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படும் உறுப்பு நுரையீரல். மற்ற உறுப்புக்களை விட, நுரையீரல் நேரடியாக சுவாசிக்கும் காற்றுடன் தொடர்புடையது. இதனை சரி செய்யும் வகையில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

குறிப்பு-1

தேவையான பொருட்கள்:

1. துளசி
2. மஞ்சள்
3. தூதுவளை
4. கருமிளகு
5. கற்பூரவள்ளி
6. ஓமம்
7. சீரகம்

செய்முறை:

ஒரு மிக்ஸி ஜாரில் துளசி மஞ்சள் தூதுவளை கரு மிளகு கற்பூரவள்ளி ஓமம் சீரகம் இவை அனைத்தையும் பாதி அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு நீர் சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க வையுங்கள். பின்னர் இதனை வடிகட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து பருகி வருகையில் சளி முற்றிலும் குணமாகும்.

இந்த சூப்பை வாரத்தில் இரண்டு முறை பருகி வருகையில் சளி என்பது வரவே வராது. இதனை பெரியவர்கள் ஒரு டம்ளர் அளவிற்கு குடித்து வரலாம். சிறிய குழந்தைகளுக்கு காரம் கம்மியாக ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் கொடுக்கலாம்.

குறிப்பு-2

தேவையான பொருட்கள்:

1. முருங்கைக்கீரை-ஒரு கைப்பிடி அளவு
2. சீரகம்-1/2 ஸ்பூன்
3. மிளகு- 5-6
4. உப்பு

செய்முறை:

ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும். அரை லிட்டர் தண்ணீர், கால் லிட்டர் அளவு வரும் வரை கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குழந்தைகளுக்கு வாரத்தில் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்து வருகையில் சளி என்பது குழந்தைகளிடம் வரவே வராது.

ஆஸ்துமா, மார்புசளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். தலைவலி, இடுப்பு வலி ,வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், கை கால் அசதி யாவும் நீங்கும். இவை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

 

 

author avatar
Selvarani